செய்திகள்

வடகிழக்கு பருவமழை தொடங்கியது - கோவை, நீலகிரியில் பலத்த மழை

Published On 2018-11-01 10:28 GMT   |   Update On 2018-11-01 10:28 GMT
வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கியதையடுத்து கோவை, நீலகிரியில் பலத்த மழை பெய்தது. இதனால் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்வோர் சிரமப்பட்டனர். #NortheastMonsoon #Rain
கோவை:

வட கிழக்கு பருவமழை இன்று தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதன்படி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இன்று மழை பெய்தது.

கோவை மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் மழை பெய்ய தொடங்கியது. கோவை மாநகரில் அதிகாலை மழை பெய்தது. பின்னர் தூறிக்கொண்டே இருந்தது.

இதனால் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்வோர் சிரமப்பட்டனர்.

மேட்டுப்பாளையத்தில் அதிகாலை 5 மணி முதல் 6 மணி வரை பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. வால்பாறை அருகே உள்ள ஆழியாறு, அட்டகட்டி பகுதியில் லேசான தூறல் அடித்தது. வால்பாறையில் இன்று காலை பலத்த மழை பெய்தது. திருப்பூர் மாவட்டத்தில் இன்று அதிகாலை சாரல் மழை பெய்தது. காலை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. ஊட்டி, கோத்தகிரி, குன்னூர் ஆகிய பகுதிகளில் இந்த மழை நீடித்தது. இன்று காலை தூறிக்கொண்டு இருந்தது. மழை காரணமாக ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டது. #NortheastMonsoon #Rain

Tags:    

Similar News