செய்திகள்

ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்யவில்லை- மு.க.ஸ்டாலின் மீது பிரேமலதா பாய்ச்சல்

Published On 2018-11-05 07:41 GMT   |   Update On 2018-11-05 07:49 GMT
தமிழகத்தில் நடைபெற்று வரும் அவல ஆட்சியை கவிழ்க்க முக ஸ்டாலின் முயற்சி செய்யவில்லை என்று தாம்பரத்தில் நடைபெற்ற தே.முதி.க பொதுக்கூட்டத்தில் பிரேமலதா பேசினார். #premalatha #mkstalin #tngovt

சென்னை:

தாம்பரத்தில் நடைபெற்ற தே.முதி.க பொதுக் கூட்டத்தில், அக் கட்சியின் பொருளாளர் பிரேமலதா கலந்துகொண்டார். அப்போது ஆளும் கட்சியான அ.தி.மு.கவையும் எதிர்க்கட்சியான தி.மு.கவையும் கடுமையாகச் சாடினார். அவரது பேச்சு வருமாறு:-

தமிழகத்தில் நிலையில்லாத அவல ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆளும் கட்சியின் அவலத்தை தட்டிக்கேட்கும் இடத்தில் தி.மு.க. இருக்கிறது 98 எம்.எல்.ஏ.க்களை வைத்துள்ள ஸ்டாலின் என்ன ஆக்கபூர்வமான பணிகளைச் செய்தார்? எதற்காக இந்த ஆட்சியை ஸ்டாலின் தொடர வைக்கிறார் என்பது தான் ஒட்டுமொத்த தமிழக மக்களின் கேள்வி.

20 தொகுதியில் இடைத் தேர்தல் நடத்தி மக்களுடைய வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது. உண்மையிலேயே, எதிர்க் கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு பொறுப்பு இருந்தால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும். ஆனால், அதைவிட்டுவிட்டு நாங்கள் பின்புற வழியாக வந்து ஆட்சியமைக்க விரும்பவில்லை என சப்பைக் காரணத்தைக் கூறுகிறார்.


உடனடியாக இந்த ஆட்சியை ஸ்டாலின் அகற்ற வேண்டும். பொறுப்பில்லாத ஆட்சி நடந்து கொண்டிருப்பதால்தான் தமிழகம் தற்போது அவலநிலையில் உள்ளது. குட்கா ஊழல், சி.பி.ஐ ரெய்டு என ஊழல் அரசாங்கம் நடைபெற்று வருகிறது.

வளர்ச்சிப் பணிகள் நடைபெறவில்லையே என்று கேட்டால், கஜானாவில் காசு இல்லை என்கிறார்கள். ஆனால், ஒவ்வொரு அமைச்சர் வீட்டு கஜானாவிலும் கோடிகள் புரளுகின்றன.

இவ்வாறு அவர் பேசினார். #premalatha #mkstalin #tngovt

Tags:    

Similar News