செய்திகள்

பாராளுமன்ற தேர்தல் - டி.டி.வி. தினகரன் குறி வைக்கும் 11 தொகுதிகள்

Published On 2019-01-20 07:28 GMT   |   Update On 2019-01-20 07:28 GMT
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட டிடிவி தினகரன் 11 தொகுதிகளை தேர்ந்தெடுத்துள்ளார். #TTVDhinakaran

சென்னை:

பாராளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. தனித்தே போட்டியிட முடிவு செய்துள்ளது. அனைத்து தொகுதிகளிலும் மல்லுகட்டுவதை விட வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை கண்டறிந்து அந்த தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி பணியாற்ற டி.டி.வி. தினகரன் முடிவு செய்துள்ளார்.

இதற்காக ஒரு தனியார் நிறுவனத்தின் மூலம் சர்வே நடத்தப்பட்டுள்ளது. அந்த சர்வேயில் 11 தொகுதிகள் வெற்றி வாய்ப்புள்ள தொகுதியாகவும், 5 தொகுதிகள் 2-ம் இடத்தை பெறும் தொகுதிகளாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

பெரும்பாலும் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் செல்வாக்கு அதிகமாக இருப்பதாக அந்த சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் தேர்வு செய்து வைத்துள்ள 11 தொகுதிகள் விவரம் வருமாறு:-

வட சென்னை, ஸ்ரீபெரும்புதூர், வேலூர், ஆரணி, சேலம், திருப்பூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தேனி, தென்காசி ஆகிய 11 தொகுதிகள்.

வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் சில தொகுதிகளில் இரண்டாம் இடத்தை அ.ம.மு.க. பிடிக்கும் என்று நம்பப்படுகிறது.

எனவே அந்த 11 தொகுதிகளிலும் கூடுதல் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளனர். #TTVDhinakaran

Tags:    

Similar News