செய்திகள்

ஆரல்வாய்மொழியில் தாய், மகன் மீது தாக்குதல் - 10 பேர் மீது 7 பிரிவுகளில் வழக்கு

Published On 2019-02-21 11:48 GMT   |   Update On 2019-02-21 11:48 GMT
ஆரல்வாய்மொழியில் தாய் மற்றும் மகன் மீது தாக்குதல் நடத்திய 10 பேர் மீது போலீசார் பெண் வன்கொடுமை சட்டம், கொலை மிரட்டல் உள்பட 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
நாகர்கோவில்:

ஆரல்வாய்மொழியை அடுத்த செண்பகராமன் புதூரைச் சேர்ந்தவர் ஜோஸ்வா. இவரது மனைவி அமுதா, (வயது 40).

இவர்களது மகன் விக்னேஷ், (17). இவரும், மாதவலாயத்தைச் சேர்ந்த வாசிமும் நெருங்கிய நண்பர்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக முன் விரோதம் இருந்து வந்தது.

நேற்றிரவு வாசிம் தனது நண்பர்கள் சிலருடன் விக்னேஷ் வீட்டிற்கு சென்றார். வீட்டில் இருந்த விக்னேஷை சரமாரியாக தாக்கினர். அதை தடுக்க வந்த அவரது தாயார் அமுதாவையும் கையால் தாக்கினர். மேலும் அவர்கள் கொலை மிரட்டலும் விடுத்தனர்.

தாக்குதலில் விக்னேஷ் காயம் அடைந்தார். அவர், சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து அவரது தாயார் அமுதா, ஆரல்வாய்மொழி போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மகேஷ்வரராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.

அமுதா அளித்த புகாரின் பேரில் மாதவலாயத்தைச் சேர்ந்த வாசிம், ‌ஷகில், ஷாஜித், பாரிஸ், அசிம், சல்மான் மற்றும் கண்டால் தெரியும் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர்கள் மீது பெண் வன்கொடுமை சட்டம், கொலை மிரட்டல் உள்பட 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

போலீசார் அவர்களை தேடி வருகிறார்கள். இந்த சம்பவத்தை தொடர்ந்து செண்பகராமன்புதூர் மாதவலாயம் பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.
Tags:    

Similar News