செய்திகள்

காதலியை ஏமாற்றி கர்ப்பம் ஆக்கியதால் கைது - ஜாமீனில் வந்த வாலிபர் தற்கொலை

Published On 2019-04-25 11:22 GMT   |   Update On 2019-04-25 11:22 GMT
சேலம் அருகே காதலி ஜெயிலில் அடைத்ததால் விரக்தியில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம்:

சேலம், பள்ளப்பட்டி, ராமநேசன் நகரை சேர்ந்தவர் கோபி (வயது 30). இவர் கூலி வேலைக்கு செல்வது வழக்கம்.

இதில் கிடைக்கும் வருமானத்தை நண்பர்களுடன் சேர்ந்து மதுகுடித்து செலவழித்து வந்தார். மாதத்தில் பாதி நாட்கள் தான் வேலைக்கு செல்வார். மீதமுள்ள நாட்கள் வேலைக்கு செல்லாமல் நண்பர்களுடன் சேர்ந்து அந்த பகுதியில் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக அவர் மீது பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.

நேற்று இரவு கோபி வழக்கம்போல் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து அறையில் தூங்கினார்.

இன்று காலையில் வெகு நேரமாகியும் அறை கதவை திறக்கவில்லை. இதனால் உறவினர்கள் கதவை திறக்குமாறு கூறி தொடர்ந்து தட்டினர்.

கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அவர்கள், பள்ளப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு வந்து கதவை திறந்து பார்த்தபோது, கோபி தூக்கில் பிணமாக தொங்கினார். அவர், தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது.

இவர் எதற்காக? தற்கொலை செய்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தியதியல் போலீசாருக்கு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

இது பற்றி போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது:-

தற்கொலை செய்த கோபிக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒரு இளம் பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கத்தை பயன்படுத்தி கோபி, அந்த பெண்ணை காதலிக்க தொடங்கினார். ஒரு கட்டத்தில் தனது காதலை அவரிடம் வெளிப்படுத்தினார். இந்த காதலை அந்த பெண் ஏற்றுக் கொண்டார்.

இதையடுத்து இருவரும் பல்வேலு இடங்களுக்கு சென்று தங்களது காதலை வளர்த்து வந்தனர். அப்போது திருமணம் செய்வதாக கூறி, கோபி, அந்த பெண்ணுடன் உல்லாசமாக இருந்தார்.இதில் அவர் கர்ப்பம் ஆனார்.

இதையறிந்த கோபி, தனது காதலியை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று ஏமாற்றி கர்ப்பத்தை கலைத்து விட்டார். பின்னர் திருமணம் செய்து கொள்ளவும் மறுத்து விட்டார்.

இதனால் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைந்த அந்த பெண் தன்னுடைய வாழ்க்கையை சீரழித்த கோபி மீது போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான் கோபி ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்தார்.

இந்த நிலையில் விரக்கி அடைந்த அவர் மது போதையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு இருப்பது தெரியவந்தது.

இவ்வாறு போலீசார் கூறினர்.

கோபியின் உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News