செய்திகள்

கிறிஸ்தவ ஆலயத்தின் உண்டியலை உடைத்து கொள்ளை - கண்காணிப்பு காமிராவில் கொள்ளையன் உருவம்

Published On 2019-05-07 12:03 GMT   |   Update On 2019-05-07 12:03 GMT
தக்கலை அருகே கிறிஸ்தவ ஆலயத்தின் உண்டியலை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டவரின் உருவத்தை கண்காணிப்பு காமிரா மூலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தக்கலை:

தக்கலை அருகே சாமியார் மடத்தை அடுத்த கவியலூரில் தூய சகாய அன்னை ஆலயம் உள்ளது.

இந்த ஆலயத்தின் பங்குத்தந்தையாக ஜாண் பால் உள்ளார். அதே பகுதியை சேர்ந்த ராமசாமி காவலாளியாக உள்ளார்.

நேற்று மாலை வழக்கம் போல் ஆலயத்தின் மின் விளக்குகளை எரியவிட்டு விட்டு ராமசாமி சென்றார். இன்று காலை மின்விளக்குகளை அணைக்க வந்த போது ஆலயத்தின் முன் பகுதியில் உள்ள குருசடியின் பக்கத்தில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு இருந்தது. உண்டியலில் இருந்த பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்று இருந்தனர்.

இதுகுறித்து ராமசாமி ஆலயச் செயலாளர் பென்சி ராணி மற்றும் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

தக்கலை இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் மற்றும் போலீசாரும் அங்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

ஆலயத்தின் எதிர்புரம் உள்ள கடையில் கண்காணிப்பு காமிரா ஒன்று உள்ளது. அந்த காமிராவில் பதிவாகி இருந்த காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது கொள்ளையன் ஒருவன் கடப்பாறை கம்பியுடன் வந்து உண்டியலை உடைப்பது போன்ற காட்சி பதிவாகி உள்ளது. அந்த காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து பென்சிராணி கொடுத்த புகாரின் பேரில் தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Tags:    

Similar News