செய்திகள்

கோவை, திருப்பூரில் கமல்ஹாசன் மீது போலீஸ் நிலையங்களில் புகார்

Published On 2019-05-15 06:10 GMT   |   Update On 2019-05-15 06:10 GMT
கோவை, திருப்பூரில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மீது போலீஸ் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கோவை:

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அரவக்குறிச்சியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்று பேசினார்.

இந்த கருத்து தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்தநிலையில் கோவை பாரத் சேனா அமைப்பினர் மாவட்ட அமைப்பாளர் குமரேசன் தலைமையில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய கமல்ஹாசன் 4 சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதி பொதுக்கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர், மாநகர போலீஸ் கமி‌ஷனர் ஆகியோரிடம் புகார் மனு அளித்தனர்.

குனியமுத்தூர் போலீஸ் நிலையத்தில் சிவசேனா அமைப்பினர் தெற்கு மாவட்ட செயலாளர் கிட்டாமணி தலைமையில் கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தனர்.

இதே போல திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் இந்து முன்னேற்ற கழக தலைவர் கோபிநாத் தலைமையில் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தனர்.

இன்று கோவையில் பாரத் சேனா சார்பில் கமல்ஹாசனின் உருவ பொம்மை எரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் மாலை 4 மணிக்கு தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு அகிலபாரத இந்து மகா சபை சார்பில் கமல்ஹாசனை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடக்கிறது. நாளை காந்தி பார்க்கில் அகில பாரத அனுமன் சேனா சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

Tags:    

Similar News