செய்திகள் (Tamil News)
கோப்புப்படம்

திருவள்ளூர் மாவட்டத்தில் 8 ஊராட்சி ஒன்றியங்களில் நாளை ஓட்டுப்பதிவு

Published On 2019-12-26 08:38 GMT   |   Update On 2019-12-26 08:38 GMT
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களில் 2162 பதவிகளுக்கு நாளை ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது.
திருவள்ளூர்:

தமிழகத்தில் நாளை (27-ந்தேதி) மற்றும் 30-ந்தேதிகளில் 2 கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக் கிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளுக்கு 2 கட்டமாக தேர்தல் நடக்கிறது.

இதில் கடம்பத்தூர், பள்ளிப்பட்டு, பூந்தமல்லி, பூண்டி, ஆர்.கே.பேட்டை, திருத்தணி, திருவாலங்காடு, திருவள்ளூர் ஆகிய 8 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள மாவட்ட வார்டு உறுப்பினர் 16, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் 126, கிராம ஊராட்சி தலைவர் 298, கிராம வார்டு உறுப்பினர்கள் 1722 என மொத்தம் 2162 பதவிகளுக்கு நாளை ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது.

எல்லாபுரம், கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர், புழல், சோழவரம், வில்லிவாக்கம் ஆகிய 6 ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் 2563 உள்ளாட்சி பதவிகளுக்கு வருகிற 30-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறஉள்ளது.

நாளை நடைபெறும் ஓட்டுப்பதிவுக்கான இறுதி கட்ட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. வாக்குச்சாவடி மையங்கள் அமைப்பது, வாக்குச்சீட்டுகளை தனித்தனியாக பிரிப்பது உள்ளிட்ட பணிகள் விறுவிறுப்பாக நடக்கிறது. உள்ளாட்சி தேர்தலையொட்டி பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

Similar News