செய்திகள் (Tamil News)
குட்கா கடத்திவந்து கைதான இருவரையும் படத்தில் காணலாம்.

பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் வேனில் கடத்தி வந்த ரூ.7 லட்சம் குட்கா பறிமுதல்- 2 பேர் கைது

Published On 2020-08-19 06:45 GMT   |   Update On 2020-08-19 06:45 GMT
வேனில் கடத்தி வரப்பட்ட ரூ.7 லட்சம் மதிப்புள்ள குட்கா பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் பிடிபட்டது. அதை கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
அணைக்கட்டு:

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவில், தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சுங்கச்சாவடியில் நேற்று முன்தினம் இரவு பள்ளிகொண்டா சப்-இன்ஸ்பெக்டர்கள் சி.ரவி, மணிவண்ணன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அதிகாலை 4 மணிக்கு தார்பாய் போட்டு மூடியபடி ஒரு மினி வேன் வேலூரை நோக்கி செல்ல சுங்கச்சாவடியில் நின்றுகொண்டிருந்தது.

அப்போது வாகன தணிக்கையில் இருந்த போலீசார் சந்தேகத்தின் பேரில் மினி வேனை மடக்கி டிரைவரிடம் விசாரனை நடத்தினர். விசாரனையில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார். அதைத்தொடர்ந்து போலீசார் வேனை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று சோதனை செய்தனர். சோதனையில் 40 மூட்டைகளில் சுமார் ரூ.7 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகள் இருந்ததை கண்டுபிடித்தனர்.

விசாரணயில் குட்கா கடத்திவந்தது கிருஷ்ணகிரி தாலுகா பெத்ததாளபள்ளியை அடுத்த பாஞ்சாலுார் கிராமத்தை சோந்த பூங்காவனம் மகன் சதீஷ் (வயது 22) மற்றும் ராஜஸ்தான் மாநிலம் பின்மால் தாலுகா பீம்புரா கிராமத்தை சேர்ந்த ஜீதாராம்ஜி மகன் பவீஸ்குமார் (22) என்பதும், ஓசூரை அடுத்த அத்திப்பள்ளியில் இருந்து கடத்திவந்ததும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து குட்கா கடத்திவந்த வேன் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுபற்றிய தகவல் கிடைத்தவுடன் வேலூர் துணைபோலீஸ்சூப்பிரண்டு திருநாவுக்கரசு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பறிமுதல் செய்யப்பட்ட குட்காவை பார்வையிட்டார். இதனை தொடர்ந்து சதீஷ் மற்றும் பவீஸ்குமார் ஆகியோரை பள்ளிகொண்டா போலீசார் கைது செய்தனர்.

Similar News