செய்திகள் (Tamil News)
மற்றொரு கடையில் விரல் ரேகையை பதிவு செய்த இளம்பெண்ணை உள்படத்திலும் காணலாம்.

கொரோனா தொற்று கட்டுக்குள் வந்ததால் பொருட்கள் பெற ரேஷன் கடைகளில் விரல் ரேகை பதியும் முறை மீண்டும் அமல்

Published On 2021-07-02 14:26 GMT   |   Update On 2021-07-02 14:26 GMT
கொரோனா தொற்று கட்டுக்குள் வந்ததால் பொருட்கள் பெற ரேஷன் கடைகளில் விரல் ரேகை பதியும் முறை மீண்டும் அமலுக்கு வந்தது.
திருச்சி:

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் விரல் ரேகை பதிந்து (பயோமெட்ரிக் முறை) பொருட்கள் வழங்கும் நடைமுறை இருந்து வந்தது. இதற்காக ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் பயோ மெட்ரிக் கருவி வைக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் கொரோனா பரவல் காரணமாக ரேஷன் கடைகளில் விரல் ரேகை பதியும் முறை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தற்போது கொரோனா தொற்று குறைந்து கட்டுக்குள் வந்துள்ள காரணத்தினால் ரேஷன் கடைகளில் விரல் ரேகைகளை பதிந்து உணவு பொருட்களை பெற்று செல்லும் நடைமுறை மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் திருச்சியில் உள்ள ரேஷன் கடைகளில் எந்திரத்தில் விரல் ரேகையை பதிந்து பொதுமக்கள் உணவு பொருட்களை பெற்றுச் சென்றனர்.

இந்தநிலையில் திருச்சி பெரியமிளகுபாறை பகுதியில் உள்ள ரேஷன் கடையில் நேற்று காலை பயோமெட்ரிக் கருவியில் திடீரென பழுது ஏற்பட்டது. இதனால் உணவு பொருட்களை வினியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதன்காரணமாக பொதுமக்கள் நீண்டநேரம் வரிசையில் காத்து இருந்தனர். சுமார் 1 மணி நேரத்துக்கு பிறகு கருவியில் ஏற்பட்ட பழுது சரி செய்யப்பட்டது. அதன்பிறகு பொதுமக்கள் விரல் ேரகையை பதிந்து பொருட்களை பெற்றுச் சென்றனர்.

Similar News