செய்திகள் (Tamil News)
புலிகளை பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்ற காட்சி.

புலிகளை காக்க வலியுறுத்தி உடுமலையில் வாகன பேரணி

Published On 2021-10-01 09:59 GMT   |   Update On 2021-10-01 09:59 GMT
உடுமலையில் இருந்து புறப்பட்ட வாகன பேரணி பல்லடம், அவிநாசி, அன்னூர், புளியம்பட்டி வழியாக சத்தியமங்கலத்தை அடைந்தது.
உடுமலை:

சுதந்திர தின பவள விழாவை ஒட்டி 'ஆசாத் கா அம்ருத் மகோத்சவ்'என்ற பெயரில் இந்தியா முழுவதும் உள்ள புலிகள் காப்பகங்களில் புலிகளுக்காக இந்தியா என்ற தலைப்பில் 7500 கிலோ மீட்டர் தூரம் வாகன பேரணி நடக்கிறது. 

ஆனைமலை புலிகள் காப்பகம் சார்பில் வாகன பேரணி நடந்தது. பேரணி பொள்ளாச்சி எம்.ஜி.எம்., கல்லூரியில்  இருந்து தொடங்கி தேவனூர்புதூர், ஜல்லிப்பட்டி, குறிச்சிக்கோட்டை வழியாக உடுமலையை வந்தடைந்தது . ஆர்.ஜி.எம்., பள்ளியில் புலிகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

இதைத்தொடர்ந்து உடுமலையில் இருந்து புறப்பட்ட வாகன பேரணி பல்லடம், அவிநாசி ,அன்னூர், புளியம்பட்டி வழியாக சத்தியமங்கலத்தை அடைந்தது. இதில் வன ஊழியர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் பங்கேற்றனர். வழியில் பொதுமக்களுக்கு புலிகளை பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.  

Similar News