செய்திகள் (Tamil News)
கோப்புபடம்.

வெள்ளகோவில் விவசாயிகளுக்கு மானியத்தில் மரக்கன்றுகள்

Published On 2021-11-16 08:50 GMT   |   Update On 2021-11-16 08:50 GMT
மரக்கன்றுகளை நடவு செய்து பராமரிப்பு செய்ய தொடர்ச்சியாக வரும் 3 ஆண்டுகளுக்கு மரக்கன்று ஒன்றுக்கு ரூ.7- வீதம் மானியம் வழங்கப்பட உள்ளது.
வெள்ளகோவில்:

விவசாயிகளுக்கு மானிய விலையில் மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது.

இதுகுறித்து வெள்ளகோவில் வேளாண் துறை உதவி இயக்குனர் ஆர்.பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மற்றும் வனத்துறையும் இணைந்து வேளாண் விளை நிலங்களில் உற்பத்தியினை பாதிக்காத வகையில் பலன் தரும் மரக்கன்றுகள் நடவு செய்து பராமரிப்பு மானியம் வழங்கும் திட்டத்தில் வெள்ளகோவில் வட்டாரத்திற்கு தேக்கு மற்றும் செம்மரம் கன்றுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு வழங்கும் மரக்கன்றுகளை பண்ணையை சுற்றிலும் வயல், வரப்புகள், பண்ணைக்குட்டைகள் அல்லது குறைந்த அளவு முறையில் விளை நிலங்களில் நடவு செய்யலாம். 

இதற்காக மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட உள்ளது, இவ்வாறு வழங்கப்பட்ட மரக்கன்றுகளை நடவு செய்து பராமரிப்பு செய்ய தொடர்ச்சியாக வரும் 3 ஆண்டுகளுக்கு மரக்கன்று ஒன்றுக்கு ரூ. 7- வீதம் மானியம் வழங்கப்பட உள்ளது. 

இதன் மூலம் பண்ணை பகுதியை ஆண்டு முழுவதும் பசுமையாக மாற்றுவதுடன், எதிர்காலத்தில் மரக்கன்றுகள் மூலமாக நல்ல லாபம் ஈட்ட வழிவகை உள்ளது.

ஆகவே வெள்ளகோவில் வட்டாரத்தை சேர்ந்த விவசாயிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் பகுதிக்கு வரும் உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொண்டோ அல்லது வெள்ளகோவில் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடர்பு கொண்டு விபரங்களைக் கேட்டு பயன்பெறலாம். 

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News