செய்திகள்
கே.வி.குப்பம் அடுத்த ஐதர்புரத்தில்மாடிவீடு பாலாற்று ஓரத்தில் இருந்தபோது எடுத்த படம்.

கே.வி.குப்பம் அருகே பாலாற்று வெள்ளத்தில் மாடி வீடு அடித்து செல்லப்பட்டது

Published On 2021-11-20 03:31 GMT   |   Update On 2021-11-20 03:31 GMT
கே.வி.குப்பம் அருகே கனமழை வெள்ளத்தால் மண் அரிப்பு ஏற்பட்டு அழகிய மாடி வீடு மிகமெதுவாகச் சரிந்து, நொறுங்கி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.
கே.வி.குப்பம்:

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே பசுமாத்தூர் ஊராட்சி ஐதர்புரத்தை சேர்ந்தவர் இளங்கோ (வயது 72), வக்கீல். இவர் பாலாற்றின் ஓரத்தில் தன்னுடைய பட்டா நிலத்தில் 5 ஆண்டுகளுக்கு முன்பு மாடி வீடுகட்டினார். இந்த வீட்டில் 6 பேர் கொண்ட குடும்பம் வசித்து வந்தது.

அண்மை காலமாக பெய்துவரும் கனமழை வெள்ளத்தால் பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த வெள்ளம் இந்த மாடிவீட்டைச் சூழ்ந்துகொண்டது. இதனால் மண் அரிப்பு ஏற்பட்டு அழகிய மாடி வீடு மிகமெதுவாகச் சரிந்து, நொறுங்கி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதில் இருந்தவர்கள் முன்னேற்பாடு நடவடிக்கையாக வருவாய்த் துறையினரால் வெளியேற்றப்பட்டனர். இதனால் அசம்பாவிதம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News