உள்ளூர் செய்திகள் (District)
தருமபுரி குமாரசாமிப்பேட்டை சிவ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தெப்ப உற்சவம் நடைபெற்றது.

தருமபுரி குமாரசாமிப்பேட்டை சிவ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தெப்ப உற்சவம்

Published On 2022-01-24 06:36 GMT   |   Update On 2022-01-24 06:36 GMT
தருமபுரி குமாரசாமிபேட்டை சிவசுப்பிரமணி சாமி கோவிலில் கொரோனா வழிமுறைகளை பின்பற்றி தெப்ப உற்சவம் நடந்தது.
தருமபுரி:

தருமபுரி குமாரசாமிப் பேட்டை  சுவாமி கோவில் தைப்பூச தேர்த்திருவிழா 10 நாட்கள் நடைபெற்றது. 

இந்த திருவிழா கொடியிறக்கம் மற்றும் பல்லக்கு உற்சவம் நடை பெற்றது. இதில் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் சிவ சுப்ரமணிய சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
 
இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் ஆண்டு தோறும் கோவில் எதிரில் உள்ள தெப்பக்குளத்தில் நடைபெறுவது வழக்கம். கொரோனா பரவாமல் தடுக்க அரசால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் இந்தாண்டு தெப்பக் குளத்தில் உற்சவம் நடை பெற வில்லை. அதற்கு பதிலாக கோவில் வளாகத் திலேயே ஆகம விதிகள் படி தண்ணீர் நிரம்பிய கொப்பரையில் தெப்ப உற்சவம் நடைபெற்றது. 

இதில் சிவ சுப்பிரமணிய சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்க சிறப்பு வழிபாடுகள் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள் யாரும் கலந்து கொள்ள அனுமதி வழங்கப் படவில்லை. இதற்கான ஏற்பாடு களை விழாக் குழுவினர் மற்றும் செங்குந்தர் சமூகத்தினர் செய்திருந்தனர்.

Similar News