உள்ளூர் செய்திகள் (District)
.

சேலம் மாவட்டத்தில் 699 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் ஏற்பாடு

Published On 2022-01-24 10:13 GMT   |   Update On 2022-01-24 10:13 GMT
சேலம் மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் 699 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.
சேலம்:

சேலம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 699 பதவிகளுக்கு ஓட்டுப் பதிவு நடைபெற உள்ளது.

அதில் சேலம் மாநகராட்சி யில் 60 வார்டு உறுப்பினர்கள்,  நகராட்சிகளில் ஆத்தூரில் 33, நரசிங்கபுரத்தில் 18, மேட்டூர், எடப்பாடி தலா 30 வார்டுகள், இடங்கணசாலை, தாரமங்கலம் தலா 27  வார்டுகள் என 165 உறுப்பினர்கள், மொத்தமுள்ள 31 பேரூராட்சிகளில் வனவாசியில் 12, மேச்சேரி, பி.என்.பட்டி, சங்ககிரி, தம்மம்பட்டியில் தலா 18 வார்டுகள், இதர 26 பேரூராட்சியில் தலா 15 வார்டுகள் என 474 வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது.

மொத்தம் 699 வார்டு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதையொட்டி கடந்த 5-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல், சட்டசபையின்  11 தொகுதிகள் வாரியாக வெளியிடப்பட்டது.

அதில் 49 ஆயிரத்து 174 பேர் புதிதாக சேர்க்கப்பட்டனர். 17 ஆயிரத்து 953 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.  அவர்கள் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டுகள் முறையே சேர்த்தல், நீக்கல் பணி, ஆன்லைன் வழியாக மேற்கொள்ளப்படுகிறது.

விரைவில் வார்டு வாரியாக துணை வாக்காளர் பட்டியல் 1 வெளியிடுவதற்கான பணி நடக்கிறது. இறுதி வாக்காளர் பட்டியலுக்கு டிசம்பர் 31ம் தேதி வரை பெயர் சேர்த்தல், நீக்கல் மனுக்கள் பெறப்பட்டன.

அதன்பிறகும் மனுக்கள் தொடர்ந்து பெறப்படுகிறது. அவை நகர்ப்புற தேர்தல் வேட்பு மனு தாக்கல் கடைசி நாள் வரை பெறப்பட்டு, பின் துணை வாக்காளர் 2 வெளியிடப்பட்டு ஓட்டுப் பதிவு நடைபெறும்.

Similar News