உள்ளூர் செய்திகள் (District)
அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் கோரிக்கை மனு அளித்தார்.

போக்குவரத்துறை அமைச்சரிடம் தி.மு.க. மாவட்ட செயலாளர் மனு

Published On 2022-01-27 10:46 GMT   |   Update On 2022-01-27 10:46 GMT
தென்காசியில் இருந்து கேரளா உட்பட பல்வேறு இடங்களுக்கு கூடுதல் பஸ் வசதி அமைத்து தர வேண்டும் என அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் கோரிக்கை மனு அளித்தார்.
தென்காசி:

தென்காசியில் இருந்து கேரளா உட்பட பல்வேறு இடங்களுக்கு கூடுதல் பஸ் வசதி அமைத்து தர வேண்டும் அமைச்சர் ராஜ கண்ணப்பனிடம் மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் கோரிக்கை மனு வழங்கியுள்ளார்.அதில் கூறியிருப்பதாவது:-

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஒன்றியம் மற்றும் பாப்பாக்குடி, பாவூர்சத்திரம் பகுதி மக்கள் அதிகமாக மாஞ்சேரி பகுதியில் வியாபாரம் செய்து வருகிறார்கள்.

அதனால் செங்கோட்டை யில் இருந்துகோழிக்கோடு செல்லும் அரசு விரைவுப் பேருந்தை மாஞ்சேரி வழியாக மாற்றுப்பாதையில் இயக்கினால் போக்குவரத்து தூரம் குறையும். அதிக பொது மக்கள் பயன்படுத்துவதால் வருமானமும் அதிகரிக்கும்..

எனவே செங்கோட்டை கோழிக்கோடு செல்லும் தடம் எண் 0784 பேருந்தைமாஞ்சேரி வழியாக இயக்க வேண்டும். அதேபோல் நல்லூர் வழியாக சென்ற தடம் எண் 43 எல் பேருந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்த வழியாக இயக்கப்படவில்லை. எனவே அந்த பேருந்தை உடனடியாக இயக்க வேண்டும்.

மேலும் தென்காசியில் இருந்து சங்கரன்கோவிலுக்கு இடைகால் பால மார்த் தாண்டபுரம், மீனாட்சிபுரம் அரியநாயகிபுரம் (அருணாச லபுரம், வீரசிகாமணி, வழியாக சங்கரன் கோவிலுக்கு புதிய பேருந்து வழித்தடம் அமைத்து  தரவேண்டும்.

மேலும் கடையம் ஒன்றியம் மேட்டூர் புலவனூர் பகுதியில் வசிக்கும் மக்கள் தென்காசி செல்ல போக்குவரத்து வசதி இல்லாமல் சிரமப்பட்டு வருகிறார்கள்.

அதனையும் கருத்தில் கொண்டு கடையம் தென்காசி புதிய வழித்தடம் அமைத்து மேட்டூர் புலவனூர் நறையப்பபுரம் வழியாக கடையம் செல்ல பேருந்து வசதி செய்து தர வலியுறுத்த வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.

அவருடன் குற்றாலம் பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர் குமார் பாண்டியன், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் ஒன்றிய கவுன்சிலர் ரெட்டியார்பட்டி சுபாஷ் சந்திரபோஸ், தொழிலதிபர் மாரித்துரை, மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் விஜயன் ஆகியோர் உடன் சென்றனர்.

Similar News