உள்ளூர் செய்திகள் (District)
கோப்புபடம்

5-ம் கட்ட பூஸ்டர் தடுப்பூசி முகாம் நாளை நடக்கிறது

Published On 2022-02-16 09:18 GMT   |   Update On 2022-02-16 09:18 GMT
மாவட்டத்தில் மொத்தம் தகுதியான 4 லட்சத்து 8,600 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் ‘பூஸ்டர்’ தடுப்பூசி போடும் பணி கடந்த  ஜனவரி மாதம் 10-ந்தேதி தொடங்கியது. டாக்டர், செவிலியர், போலீசார் உட்பட முன்கள பணியாளருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 60 வயதை கடந்த 2 தவணை தடுப்பூசி செலுத்தி 273 நாட்கள் அல்லது 9 மாதம் கடந்தவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் மொத்தம் தகுதியான 4 லட்சத்து 8,600 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை நடந்த 4 பூஸ்டர் மற்றும் மெகா தடுப்பூசி முகாமில், 8,653 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், நாளை (17-ந் தேதி) 5-ம் கட்ட பூஸ்டர் தடுப்பூசி முகாம் மாவட்டத்தின் 77 மையங்களில் நடக்கிறது.

இதுகுறித்து சுகாதாரத்துறையினர் கூறுகையில்:

‘பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவோரின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. தகுதியான நபர்களாக இருப்பவர்கள் முன்வந்து தடுப்பூசி செலுத்த வேண்டும். முதல் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசிக்கு இவர்களுக்கு அனுப்பியது போல், பூஸ்டர் தடுப்பூசிக்கும் குறுஞ்செய்தி அனுப்பப்படும். அதனை அலட்சியமாக எடுத்துக்கொள்ள கூடாது என்றனர்.

Similar News