உள்ளூர் செய்திகள் (District)
மத்திய அரசின் திட்டங்கள் குறித்து எம்.பி.க்கள் குழு ஆய்வு கூட்டம் நடந்த காட்சி.

மத்திய அரசின் திட்டங்கள் குறித்து எம்.பி.க்கள் குழு ஆய்வு

Published On 2022-02-19 06:26 GMT   |   Update On 2022-02-19 06:26 GMT
மத்திய அரசின் திட்டங்கள் குறித்து எம்.பி.க்கள் தலைமையிலான குழு ஆய்வு நடந்தது.
புதுச்சேரி:

மத்திய அரசின் பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை ஒருங்கிணைந்து கண்காணிக்க மாவட்ட அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு கமிட்டி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த குழுவின் மறு ஆய்வுக்கூட்டம் தலைமை செயலக கருத்தரங்கு அறையில் நடந்தது. கமிட்டி தலைவர் வைத்திலிங்கம் எம்.பி, துணைத்தலைவர் செல்வகணபதி எம்.பி. ஆகியோர் தலைமை வகித்தனர். துணை சபாநாயகர் ராஜவேலு, எதிர்கட்சித்தலைவர் சிவா, அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம், எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், வைத்தியநாதன், கே.எஸ்.பி.ரமேஷ், சம்பத், செந்தில்குமார், ரிச்சர்ட், கலெக்டர் வல்லவன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட தலைவர் ரவிபிரகாஷ் மற்றும் துறை தலைவர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர். 

கூட்டத்தில் தலைவர், துணைத்தலைவர், எம்.எல்.ஏ.க்களின் கருத்துக் களை கேட்டறிந்தனர். தொடர்ந்து துறை வாரியாக மத்திய அரசின் திட்டங்கள், நிதி ஒதுக்கீடு, நிலுவைத்தொகை குறித்தும், மத்திய அரசின் திட்டங்களால் மக்களுக்கு கிடைத்த பலன்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

Similar News