உள்ளூர் செய்திகள் (District)
.

கொத்தூர் காளியம்மனுக்கு சிறப்பு பூஜை

Published On 2022-02-19 10:02 GMT   |   Update On 2022-02-19 10:02 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே கொத்தூர் காளியம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
சூளகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா -உத்தனப்பள்ளி ஊராட்சி கூகனூர் அருகில் உள்ள பழைய கொத்தூர் சாலையில் பழமை வாய்ந்த ஸ்ரீ செல்வ காளி யம்மன் ஆலயம் உள்ளது.

நேற்று மாசி மாதம் வெள்ளிக்கிழமை முன்னிட்டு  செல்வகாளி அம்மனுக்கு  அபிஷேகம், ஆராதனைகள் செய்து மங்கள ஆரத்தி காட்டி பூக்களால் அலங்கரிக்கப்பட்டது. பக்தர்கள் அனைவருக்கும் தீர்த்த பிரசாத வழங்கப் பட்டது. இப்பூஜைகளை ஏற்பாடுகளை ஆலய தர்மகர்த்தா விஜயகுமார் மற்றும் ஆலய நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

Similar News