உள்ளூர் செய்திகள் (District)
பலியான மிளா மான் குட்டி

முல்லைப்பெரியாறில் தவறி விழுந்த மிளா மான் பலி

Published On 2022-02-20 08:33 GMT   |   Update On 2022-02-20 08:33 GMT
தண்ணீர் தேடி வந்து முல்லைப்பெரியாற்றில் தவறி விழுந்த மிளா மான் பலியானது.
கூடலூர்:

தேனி மாவட்டம் கூடலூர் வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் யானை, சிறுத்தை, மிளாமான், கேளையாடு, காட்டுப்பன்றி, காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் வசித்து வருகின்றன.

இவை உணவு மற்றும் தண்ணீர் தேடி இடம்பெயர்ந்து வருகின்றன.  கூடலூர் அருகே குருவனூத்து பாலம், சிறுபுனல் நீர் மின் நிலையத்தை ஒட்டி முல்லைப்பெரியாற்றில் மிளா மான் இறந்து மிதப்பதாக வனவர் சிவலிங்கத்துக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் அங்கு விரைந்து சென்ற வனத்துறையினர் மிளாமானை மீட்டனர்.

கம்பம் அரசு கால்நடை டாக்டர் செல்வம் தலைமையில் குழுவினர் மிளாமான் உடலை பிரேத பரிசோதனை செய்து அங்கு புதைத்தனர். இறந்த மிளா மான் 6 மாத குட்டியாகும்.

தண்ணீர் தேடி வந்தபோது முல்லையாற்றில் தவறி விழுந்து பலியாகி இருக்கலாம் என மருத்துவர்கள் மற்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

Similar News