உள்ளூர் செய்திகள்
.

பள்ளிபாளையம் அருகே கருப்பண்ணசாமி கோவிலில் சாமிக்கு ரூபாய் நோட்டு அலங்காரம்

Published On 2022-02-20 09:12 GMT   |   Update On 2022-02-20 09:12 GMT
பள்ளிபாளையம் அருகே கோவிலில் கருப்பண்ணசாமி ரூபாய் நோட்டு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
பள்ளிபாளையம்:

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே சில்லாங்காடு பகுதியில் பிரசித்தி பெற்ற கோம்பு கருப்பண்ண சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 11-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனையொட்டி கோவிலில் உள்ள கோம்பு கருப்பண்ண சாமிக்கு தினந்தோறும் சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடைபெற்று வந்தது.

இதனைத்தொடர்ந்து கும்பாபிஷேகம் முடிந்து 8-வது நாளான நேற்று முன்தினம் கோம்பு கருப்பண்ண சாமி மற்றும் அய்யனார் சாமிகளுக்கு 10 ரூபாய், 20 ரூபாய், 50 ரூபாய், 100 ரூபாய் மற்றும் 2 ஆயிரம் ரூபாய் என சுமார் ரூ.3½ லட்சம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News