உள்ளூர் செய்திகள்
தேர்தல்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அமைதியாக நடந்தது

Published On 2022-02-20 09:42 GMT   |   Update On 2022-02-20 09:42 GMT
ராமநாதபுரம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அமைதியாக நடந்ததாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் கீழக்கரை, பரமக்குடி, ராமநாதபுரம், ராமேசுவரம் ஆகிய 4 நகராட்சிகள், அபிராமம், கமுதி, மண்டபம், முதுகுளத்தூர், ஆர்.எஸ்.மங்கலம், சாயல்குடி, தொண்டி ஆகிய 7 பேரூராட்சிகள் என மொத்தம் 11 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நேற்று (19ந்தேதி) வாக்கு பதிவு அமைதியாக நடை பெற்றது.

தேர்தலில் பேரூராட்சி பகுதியில் 88,712 ஆண் வாக்காளர்களும், 99,583 பெண் வாக்காளர்களும், ஒரு 3-ம் பாலின வாக்காளரும் என மொத்தம் 1,88,296 வாக்காளர்களும், நகராட்சி பகுதியில் 64,243 ஆண் வாக்காளர்களும், 72,027 பெண் வாக்காளர்களும், ஒரு 3-ம் பாலின வாக்காளரும் என மொத்தம் 1,36,271 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.

ராமநாதபுரம் நகராட்சியில் 62.74 சதவீதமும், ராமேசுவரம் நகராட்சியில் 79.77, பரமக்குடி நகராட்சியில் 67.85, கீழக்கரை நகராட்சியில் 53.07, மண்டபம் பேரூராட்சியில் 74.58, தொண்டி பேரூராட்சியில் 68.71, ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சியில் 72.41, அபிராமம் பேரூராட்சியில் 68.84 சதவீத வாக்குகள் பதிவானது.

அதேபோன்று சாயல்குடி பேரூராட்சியில் 74.06, கமுதி பேரூராட்சியில் 80.02, முதுகுளத்தூர் பேரூராட்சியில் 77.88, என சராசரியாக ராமநாதபுரம் மாவட்டத்தில் 68.03 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

தேர்தல் நடத்தை விதிகள் மற்றும்  கொரோனா  தடுப்பு  நடவடிக்கைகள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும், பாது காப்பாகவும் நடைபெற ஒத்துழைப்பு  வழங்கிய பொதுமக்களுக்கும், அரசியல்   கட்சியினருக்கும், வேட்பாளர்களுக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்று மாவட்ட கலெக்டர் சங்கர்லால் குமாவத் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News