உள்ளூர் செய்திகள்
மாயம்

பண்ருட்டி அருகே கல்லூரி மாணவி உள்பட 3 பேர் மாயம்

Published On 2022-02-20 11:30 GMT   |   Update On 2022-02-20 11:30 GMT
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கல்லூரி மாணவி உள்பட 3 பேர் மாயமானது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பண்ருட்டி:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள காட்டுக்கூடலூரை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகள் ராஜலட்சுமி (வயது 21). இவர் கொள்ளுகரங்குட்டை வள்ளலார் கல்லூரியில் பி.எட்., படித்து வருகிறார்.

சம்பவத்தன்று ராஜலட்சுமி கல்லூரிக்கு சான்றிதழ் வாங்க செல்வதாக கூறி சென்றவர் மாலை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் ராஜலட்சுமியை உறவினர் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். எங்கு தேடியும் அவர் கிடைக்வில்லை.

இந்த சம்பவம் குறித்து மணிகண்டன் முத்தாண்டிக்குப்பம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா தாமரை பாண்டியன், முத்தாண்டிக்குப்பம் சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் உள்ளிட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன கல்லூரி மாணவி ராஜலட்சுமி என்ன ஆனார்? எங்கு சென்றார்? அவரை யாரேனும் கடத்தி சென்றனரா? என்பன குறித்து பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சேந்தமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மகள் அபிநயா (17). இவர் பண்ருட்டியில் உள்ள ஒரு பாத்திரகடையில் ஊழியராக வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று வழக்கம் போல் வேலை முடித்து வீட்டிற்கு கிளம்பிய அபிநயா நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. தொடர்ந்து அவரது பெற்றோர் அபிநயாவை பல்வேறு இடங்களில் தேடிபார்த்தனர். எங்கு தேடியும் அவர் கிடைக்க வில்லை.

இந்த சம்பவம் குறித்து ராமலிங்கம் பண்ருட்டி போலீசில் புகார் செய்தார். தொடர்ந்து இன்ஸ்பெக்டர் சந்திரன் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன அபிநயாவை வலைவீசி தேடி வருகின்றனர்.

பண்ருட்டி அருகே உள்ள கீழ்காங்கேயன் குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் ராஜதுரை (29). இவர் சம்பவத்தன்று ஆடுகளை மேய்ப்பதற்காக சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இது குறித்து ராஜேந்திரன் முத்தாண்டிக்குப்பம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News