உள்ளூர் செய்திகள் (District)
அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

மன்னார்குடியில் புதிய வேளாண்மை கல்லூரி- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல்

Published On 2022-04-08 09:07 GMT   |   Update On 2022-04-08 09:07 GMT
டெல்டா பகுதியான மன்னார்குடியில் வேளாண்மை பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்று உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா கேட்டுக் கொண்டார்.
சென்னை:

தமிழக சட்டசபையில் இன்று தி.மு.க. உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா மன்னார்குடியில் வேளாண்மை கல்லூரி அமைக்கப்படுமா என கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து வேளாண்மைதுறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசியதாவது:-

15 மாவட்டங்களில் விவசாய கல்லூரிகள் இல்லாமல் உள்ளது. அதில் மன்னார்குடியும் ஒன்று. வேளாண்மை கல்லூரி அமைக்க 110 ஏக்கர் நிலம் தேவைப்படும். வருங்காலத்தில் உறுப்பினரின் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு முதல்-அமைச்சர் ஒப்புதலுடன் அங்கு வேளாண்மை கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

அப்போது உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா மற்ற மாநிலங்களில் ஒன்றை விட அதிகமான வேளாண்மை பல்கலைக்கழகங்கள் உள்ளன. ஆனால் தமிழகத்தில் ஒரே ஒரு வேளாண்மை கல்லூரி மட்டுமே உள்ளது. இதனால் தமிழகத்தில் மேலும் ஒரு வேளாண்மை பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்றும் அதனை டெல்டா பகுதியான மன்னார்குடியில் அமைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

அதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் புதிய வேளாண்மை பல்கலைக்கழகம் அமைக்க 600 ஏக்கர் நிலம் தேவைப்படும். அதனை மன்னார்குடியில் அமைக்க முதல்-அமைச்சருடன் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.


Similar News