உள்ளூர் செய்திகள் (District)
வடிவீஸ்வரம் சாலை ஜல்லி கற்களாக காட்சி அளிக்கிறது.

வடிவீஸ்வரம் பகுதியில் பழுதான சாலைகளால் வாகன ஓட்டிகள் அவதி

Published On 2022-04-12 08:17 GMT   |   Update On 2022-04-12 08:17 GMT
வடிவீஸ்வரம் பகுதியில் பழுதான சாலைகளால் வாகன ஓட்டிகள் அவதி - விரைவில் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
நாகர்கோவில்:

நாகர்கோவில் பகுதியில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் திட்ட பணிகளுக்காக பல சாலைகள் தோண்டப்பட்டு குண்டும், குழியுமாக காட்சி அளித்தது.

தற்போது பீச் ரோடு சந்திப்பில் பாதாள சாக்கடைக்கான குழாய் இணைப்பு பணி நடைபெறுகிறது.இதனால் அந்த சாலையில் வாகன போக்குவரத்து மாற்றிவிடப்பட்டுள்ளது.

இச்சாலை தவிர நகரின் உட்புற பகுதியுள்ள பல சாலைகளும் குண்டும், குழியுமாக காணப்படுகிறது.

நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில்  இருந்து வடிவீஸ்வரம் செல்லும் சாலையும் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதில் பெருமாள் கோவில் செல்லும் சாலை வெறும் ஜல்லி கற்களாகவே காணப்படுகிறது.

இதுபோல வடிவீஸ்வரத்தின் உட்புற தெருக்களுக்கு செல்லும் அனைத்து சாலைகளுமே  பொதுமக்கள் நடந்து செல்லக்கூட முடியாத அளவுக்கு மோசமாக காணப்படுகிறது. குண்டும், குழியுமான சாலைகளால் இந்த வழியாக வாகனங்கள் எதுவும் செல்ல முடியாத நிலை காணப்படுகிறது.
 
இச்சாலையில் செல்லும் இருச்சக்கர வாகனங்கள் சாலை பள்ளங்களில் கவிழ்ந்து விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. மேலும் வாகன ஓட்டிகளும் படுகாயம் அடைந்து வருகிறார்கள்.

நாகர்கோவில் நகரில் சாலைகள் சீரமைப்பு பணி தற்போது தொடங்கி நடந்து வருகிறது. வடிவீஸ்வரத்தில் பல மாதங்களாக பழுதடைந்து கிடக்கும் சாலையையும் உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிரதான சாலைகள் சீரமைப்பு பணி நடந்து வருவதால் பல வாகன ஓட்டிகள் இந்த சாலைகளை  தான் பயன்படுத்துகிறார்கள். எனவே இச்சாலைகளையும் விரைந்து சீரமைக்க வேண்டும் என வாகன ஒட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News