உள்ளூர் செய்திகள் (District)
செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய போது எடுத்த படம்.

தருமபுரியில் பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

Published On 2022-04-12 08:23 GMT   |   Update On 2022-04-12 08:23 GMT
செல்போன் டவர் அமைக்க எதிர்த்து தெரிவித்து தருமபுரியில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தருமபுரி,

தருமபுரி அடுத்த வெண்ணாம்பட்டி பகுதியில் உள்ள அசோக் நகர் பகுதியில் 200&க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.  இங்கு மாணவ&மாணவிகள், குழந்தைகள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
 
இந்த பகுதியில் ஏற்கனவே செல்போன் டவர் அமைக்கப்பட்டு செயல்பட்டு வரு கிறது.மேலும்  அசோக் நகர் மையப்பகுதியில் டவர் அமைப்பதற்காக பணிகள் நடைபெற்று வருகிறது.

தற்போது அமைக்கப்படும் செல்போன் டவரால் அதிகப் படியான கதிர்வீச்சின் காரணமாக வெண்ணாம்பட்டி அசோக் நகர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள கர்ப்பிணி பெண்கள், பள்ளி மாணவ மாணவிகள், இதய நோய் உள்ளவர்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகும் நிலை உள்ளது.
 
குறிப்பாக கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவத்தின் போது குறைபாடுடன் குழந்தைகள் பிறப்பதாக கூறி இப்பகுதியைச் சேர்ந்த 50&க்கும் மேற்பட்ட பொதுமக்கள் செல்போன் டவர் அமைப்பதை கண்டித்து கண்டன முழக்கம் எழுப்பி  இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News