உள்ளூர் செய்திகள்
பழைய குற்றாலம் அருவியில் இரவிலும் குளிக்க அனுமதிக்க வேண்டும்- கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கை
பழைய குற்றாலம் அருவியில் இரவிலும் குளிக்க அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி ஆயிரப்பேரி பொதுமககள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
வீ. கே. புதூர்:
தென்காசி ஊராட்சி ஒன்றியம், ஆயிரப்பேரி ஊராட்சி மன்றத் தலைவர் சுடலையாண்டி தலைமையில் ஆயிரப்பேரி, பாட்டப்பத்து, மத்தளம்பாறை, ஊராட்சி பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் கொடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
குற்றாலத்தில் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி, சிற்றருவி உள்ளிட்ட அருவிகள் உள்ளது. இந்த அருவிகளில் நாள்தோறும் பல்லாயிரக் கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தந்து குளித்து வந்தனர்.
இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக குற்றாலம் அருவிகளில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இப்போது கொரோனா பரவல் குறைந்துவிட்ட நிலையில் நாடு முழுவதும் அனைத்து சுற்றுலா தலங்களும் திறக்கப்பட்டு பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
தென்காசி மாவட்டத்திலுள்ள குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி ஆகிய அருவிகளில் 24 மணி நேரமும் பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் பழைய குற்றாலம் அருவியில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே குளிக்க அனுமதி வழங்கப் பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் மட்டுமன்றி பழைய குற்றாலத்தை நம்பி வாழும் வியாபாரிகள், சிறு வியாபாரிகள் அரசு கடைகளை ஏலம் எடுத்து நடத்தும் குத்தகைதாரர்கள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது சீசன் தொடங்கியுள்ள நிலையில் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாய் குளித்து மகிழும் நேரங்களில் பழைய குற்றாலம் அருவியில் மட்டும் மாலை 6 மணிக்கு மேல் குளிக்க அனுமதி இல்லை என்று சொல்லுவது அனைவருக்கும் பெரும் ஏமாற்றமாக உள்ளது.
எனவே மாவட்ட கலெக்டர் உடனடியாக இந்தப் பிரச்சனையில் தலையிட்டு குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, ஆகிய அருவிகளில் பொதுமக்கள் குளிப்பது போல் பழைய குற்றால அருவியிலும் இரவிலும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளித்திட உடனடியாக உரிய அனுமதி வழங்கிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.
இதில் ஆயிரப்பேரி ஊராட்சி மன்ற தலைவர் சுடலையாண்டி, தென்காசி மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் பி.வேலு மயில், முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் தங்கப் பாண்டியன், சுப்பிரமணியன் செந்தில்வேல், சிவாஜி, திருப்பால், பழனிப்பாண்டியன், ரேவதி, கோமு அம்மாள், மாரியம்மாள், இசக்கியம்மாள், வள்ளியம்மாள், முத்துலெட்சுமி, மத்தளம்பாறை நடராஜன் உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.