உள்ளூர் செய்திகள் (District)
ரெயில்

நெல்லை- திருச்செந்தூர் இடையே சிறப்பு ரெயில்

Published On 2022-06-04 08:01 GMT   |   Update On 2022-06-04 08:01 GMT
வைகாசி விசாக திருவிழாவையொட்டி நெல்லை- திருச்செந்தூர் இடையே சிறப்பு ரெயில் சேவை தொடங்கியது.
மதுரை

வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு நெல்லை - திருச்செந்தூர் இடையே வருகிற 12-ந் தேதி முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.  

நெல்லையில் இருந்து  காலை 11.15 மணிக்கு புறப்படும் பயணிகள் ரெயில், மதியம் 12.45 மணிக்கு திருச்செந்தூர் செல்லும். மறுமார்க்கத்தில் திருச்செந்தூரில் இருந்து இரவு 8.30 மணிக்கு புறப்படும் ரெயில், இரவு 10.10 மணிக்கு நெல்லை செல்லும். இந்த ரெயில்கள் பாளையங்கோட்டை, செய்துங்கநல்லூர், ஸ்ரீவைகுண்டம், நாசரேத், ஆறுமுகநேரியில் நின்று செல்லும். 

இது தவிர பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு பாலக்காடு - திருச்செந்தூர், திருச்செந்தூர் - நெல்லை ஆகிய விரைவு ரெயில்களில் வருகிற 9-ந் தேதி முதல் 13-ந் தேதி வரையும், நெல்லை - திருச்செந்தூர், பாலக்காடு -  திருச்செந்தூர் ஆகிய விரைவு ரெயில்களில் வருகிற 8-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை கூடுதலாக ஒரு 2-ம் வகுப்பு பொது பெட்டி இணைக்கப்படும். மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்து உள்ளது.

Tags:    

Similar News