தூத்துக்குடியில் கஞ்சா விற்ற 3 பேர் கைது
- ராஜகோபால் நகர் பகுதியில் போலீசார் வருவதை பார்த்ததும் ஒருவர் இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்றார்.
- முருகேசன் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி சிப்காட் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் சங்கர், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் பெரியநாயகம் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர்.
ராஜகோபால் நகர் பகுதியில் போலீசார் வருவதை பார்த்ததும் ஒருவர் இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்றார். அவரை விரட்டி சென்று பிடித்து சோதனை செய்தபோது அவர் அதே பகுதியைச் சேர்ந்த முருகேசன்(வயது 45) என்பதும், பாக்கெட்டில் கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.அவரிடம் இருந்து கஞ்சா பொட்டலங்களையும், அவரது இருசக்கிர வாகனத்தையும் பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.
இதேபோல் தூத்துக்குடி தென்பாகம் பகுதியில் போலீசார் தீவிரரோந்து பணி மேற்கொண்டனர்.அப்போது இந்திரா நகரை சேர்ந்த லில்லி (32)ரங்கநாதபுரம் மாரி என்ற மாரியப்பன் ஆகியோர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 650 கிராம் கஞ்சா, ரூ.8,630-ஐ பறிமுதல் செய்தனர்.