- இதுகுறித்து ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஒரத்தநாடு பகுதியில் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்யப்படுவதாக போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
தஞ்சாவூர்:
தஞ்சை அடுத்த ஒரத்தநாடு பகுதியில் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்யப்படுவதாக போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து தஞ்சை சரக டி.ஐ.ஜி.கயல்விழி நேரடி மேற்பார்வையில் செயல்பட்டு வரும் சப்- இன்ஸ்பெக்டர் அடைக்கல ஆரோக்கியசாமி டேவிட் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரத்தநாடு கடைத்தெரு அருகே ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்த புதுக்கோட்டை திருக்கோர்ணத்தை சேர்ந்த சண்முகம் (வயது46), கண்ணந்தங்குடி மேலையூரை சேர்ந்த செங்குட்டுவன் (43), ஒரத்தநாட்டை சேர்ந்த கார்த்திக் (30) ஆகிய 3 பேரையும் போலீசார் மடக்கி பிடித்து, அவர்களிடமிருந்து ஆன்லைன் லாட்டரி விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட செல்போன், ரூ.4700 ஆகியவற்றையும் பறிமுதல் செய்து ஒரத்தநாடு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.