உள்ளூர் செய்திகள்

பறிமுதல் செய்த பிளாஸ்டிக் பொருட்கள்.

குடோன்களில் பதுக்கிய 3 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

Published On 2022-10-14 09:14 GMT   |   Update On 2022-10-14 09:14 GMT
  • குடோன்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் நேரடியாக சென்று அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
  • ரூ. 1 லட்சம் மதிப்பு பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்.

பட்டுக்கோட்டை

பட்டுக்கோட்டை நகராட்சி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்டு, நகராட்சி அதிகாரிகள், பொதுமக்கள் தொண்டு நிறுவனங்கள் மற்றும் நகராட்சி ஊழியர்களால் விழிப்புணர்வு பிரச்சாரம் பலமுறை செய்யப்பட்டும், பட்டுக்கோட்டை நகரில் பிளாஸ்டிக் பொருள் சர்வ சாதாரணமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அதனைத் தொடர்ந்து பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர் சௌந்தரராஜன் தலைமையில் அதிகாரிகள் இன்று பட்டுக்கோட்டை நகர கடை வீதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் குடோன்களில் நேரடியாக சென்று அதிரடியாக ஆய்வு நடத்தினர்.

அப்போது கடைகள் மற்றும் குடோன்கள் உள்பட 4 இடங்களில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள

ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள், பதுக்கி வைத்தும், விற்பனை செய்யப்படுவதையும் தொடர்ந்து அந்த பொருட்களை நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அதனைத் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 3 டன் எடை, ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருட்களை நகராட்சி அலுவலக வளாகத்தில் வைத்து அழித்தனர்.

Tags:    

Similar News