உள்ளூர் செய்திகள்

குமாரபாளையம் அருகே லாரியை கடத்திய 3 வாலிபர்கள் கைது

Published On 2022-10-28 06:57 GMT   |   Update On 2022-10-28 06:57 GMT
  • குமாரபாளையம் அருகே உள்ள பல்லக்கா பாளையத்தில் அதிகாலை 3 மணியளவில் தன் வீட்டின் முன்பு உள்ள காலி இடத்தில் லாரியை நிறுத்தி விட்டு தூங்க சென்றார்.
  • காலை 6 மணியளவில் வந்து பார்த்த போது நிறுத்தி வைக்கப்பட்ட லாரி காணவில்லை.

குமாரபாளையம், அக்.28-

குமாரபாளையம் அருகே உள்ள பல்லக்கா பாளையத்தை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 31). இவர் லாரி வைத்து தொழில் நடத்தி வந்தார். கடந்த 25-ந்தேதி அதிகாலை 3 மணியளவில் தன் வீட்டின் முன்பு உள்ள காலி இடத்தில் லாரியை நிறுத்தி விட்டு தூங்க சென்றார். காலை 6 மணியளவில் வந்து பார்த்த போது நிறுத்தி வைக்கப்பட்ட லாரி காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், குமாரபாளையம் போலீசில் தினேஷ்குaமார் இது குறித்து புகார் கொடுத்தார்.

இது குறித்து மாவட்ட எஸ்.பி.சாய்சரண் தேஜஸ்வி உத்திரவின் பேரில், இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில், சப்- இன்ஸ்பெக்டர் சதீஸ்குமார், எஸ்.எஸ்.ஐ.க்கள் முருகேசன், இளமுருகன், போலீஸ் சரவணன் உள்ளிட்ட தனிப்படை அமைக்கப்பட்டு காணாமல் போன லாரியை தேடி வந்தனர். காவேரி நகர் புதிய பாலம் அருகே தனிப்படை போலீசார் ரோந்து மேற்கொண்டபோது, ஆம்னி காரும், பின்னால் லாரி ஒன்றும் வந்து கொண்டிருந்தது. போலீசார் மடக்கி பிடித்த போது அது காணாமல் போன லாரி என்பது தெரியவந்தது. லாரி மற்றும் மாருதி ஆம்னி கார் பறிமுதல் செய்யபட்டது.

காரை ஓட்டி வந்த பவானி சாகரை சேர்ந்த கவியரசு (24), லாரியை ஓட்டி வந்த காரமடை ஜேசுராஜ் (36), அதே லாரியில் வந்த திருமுருகன்பூண்டியை சேர்ந்த கண்ணன், (38) ஆகிய 3 பேரை விசாரணை செய்ததில் லாரியை திருடியதை ஒப்புக்கொண்டனர். இவர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டு குமார பாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட னர்.

இது குறித்து இன்ஸ்

பெக்டர் ரவி கூறியதாவது:

காணாமல் போன லாரியை பிடிக்க எனது தலைமையில் தனிப்படை அமைக்கபட்டது. காவேரி நகர் பகுதியில் ஆய்வு செய்த போது, போலீஸ் யாராவது இருக்கிறார்களா? என்பதை அறிந்து கொள்ள மாருதி ஆம்னி காரில் முன்னால் வந்து யாரும் இல்லை என்பதை அறிந்து, லாரியை எடப்பாடி கொண்டு செல்ல முயற்சித்தனர். இதை தனிப்படை ேபாலீ சார் கண்டுபிடித்து லாரி கடத்தலில் ஈடுபட்ட 3 ேபரையும் கைது செய்தனர். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News