உள்ளூர் செய்திகள்

கிரேன் மூலம் வேறு இடத்தில் வைக்கபட்டுள்ள கோவிலை படத்தில் காணலாம்.

4 வழிசாலை அமைக்க இடையூறாக இருந்த கோவிலை வேறு பகுதிக்கு நகர்த்தி வைத்த ஒப்பந்ததாரர்கள்

Published On 2023-06-08 09:41 GMT   |   Update On 2023-06-08 10:52 GMT
  • கோவில் அருகே சாலை அமைக்கும் பணி செய்ய முயற்சித்தனர்.
  • கிரேன் முலம் பாது காப்பாக தூக்கி நகர்த்தி வைத்து உள்ளனர்.

சூளகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா, தருமபுரி- ஒசூர் நான்கு வழி சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சாலை அமைப்பதற்காக மிக பலமை வாய்ந்த புளியமரம், அரசமரம், மற்றும் விளை நிலங்கள், வீடுகள் மற்றும் அரசு பள்ளிகள், கோவி ல்கள் எதுவாக இருந்தாலும் அவைகளை அகற்றி புதிய சாலை அமைக்கும் பணி நடை பெற்று வருகிறது.

இந்த நிலையில் உத்தன ப்பள்ளி அருகே மெட்டறை பகுதியில் 10-ஆண்டுக்கு முன்னர் பழைய சாலை அருகே ஆஞ்சநேயர் கோவில் காங்கீரிட் மூலம் கட்டப்பட்டது.

இப்பகுதியை சேர்ந்த மெட்டரை, அலேசீபம், தேவசந்திரம், லிங்கனம் பட்டி மற்றும் சில கிராம மக்கள் பல லட்சம் மதிப்பில் கோவிலை கட்டி தரிசனம் செய்து வந்தனர்.

இந்த நிலையில் சில மாதத்திற்கு முன்பு நெடுஞ்சாலை துறையினர் இப்பகுதியில் கோவில் அருகே சாலை அமைக்கும் பணி செய்ய முயற்சித்தனர்.

இதனையடுத்து கோவிலை நெடுஞ்சாலை ஒப்பந்ததார் மற்றும் பொதுமக்கள் இணைந்து கோவிலை நூதன முறையில் கிரேன் முலம் பாது காப்பாக தூக்கி நகர்த்தி வைத்து உள்ளனர்.

உரிய இடம் பார்த்து கோவிலை வைக்க இருப்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

Similar News