உள்ளூர் செய்திகள்

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள்.

ஏற்காட்டில் விதிகளை மீறிய 4 வாகனங்கள் பறிமுதல் வட்டார போக்குவரத்து அதிகாரி நடவடிக்கை

Published On 2022-08-03 08:19 GMT   |   Update On 2022-08-03 08:19 GMT
  • ஏற்காட்டிற்கு தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா வருவது வழக்கம்.
  • சேலம் வட்டார போக்குவரத்து அலுவலர் கல்யாண் குமார் ஏற்காடு வந்து வாகன தணிக்கையில் ஈடுபட்டார்.

ஏற்காடு:

தமிழகத்தின் சுற்றுலா தலங்களில் முக்கிய இடங்களில் ஒன்றான ஏற்காட்டிற்கு தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா வருவது வழக்கம். இதனால் ஏற்காட்டில் வாடகை கார்,வேன் மற்றும் ஆட்டோக்கள் அதிக அளவில் இயக்கப்பட்டு வருகிறது.

மேலும் கடந்த சில மாதமாக ஏற்காடு வரும் சுற்றுலா பயணிகளுக்கு இருசக்கர வாகனங்கள் வாடகைக்கு விடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று ஏற்காட்டில் உள்ள வாடகை கார் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள் ஏற்காட்டில் ஒரு சிலர் இருசக்கர வாகனத்தை வாடகைக்கு விடுவதால் வாடகை வாகனம் ஓட்டும் எங்களது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படுவதாகவும், இதுபோல் இருசக்கர வாகனங்களை சட்டத்துக்கு புறம்பாக வாடகைக்கு விடுவதை தடுத்து நிறுத்த வேண்டும் வட்டார போக்கு–வரத்து அதிகாரி, ஏற்காடு போலீஸ் நிலையத்தில் புகார் மனு கொடுத்தனர்.

இதைத்தொடர்ந்து உடனடியாக சேலம் வட்டார போக்குவரத்து அலுவலர் கல்யாண் குமார் ஏற்காடு வந்து வாகன தணிக்கையில் ஈடுபட்டார். இந்த தணிக்கையில் சுற்றுலா பயணிகளுக்கு வாடகைக்கு விடப்பட்டு அவர்கள் ஓட்டிவந்த 2 மோட்டார்சைக்கிள்களை ஆர்.டி.ஓ பறிமுதல் செய்தார்.

அதனை தொடர்ந்து நடைபெற்ற வாகன தணிக்கையில் சொந்த பயன்பாட்டிற்கான வாகனத்தில் வாடகைக்கு ஓட்டியும் அதில் அதிக பள்ளி குழந்தைகளை ஏற்றி சென்ற கார் மற்றும் இன்சூரன்ஸ் போன்ற ஆவணங்கள் இல்லாத 4 கார்களை பறிமுதல் செய்து அதற்கு அபராதமும் விதித்தார்.

Tags:    

Similar News