திருவண்ணாமலை கண்டாச்சிபுரம் அருகே 41 மூட்டை குட்கா பறிமுதல்
- கடத்தல்காரன் காரை மோதவிட்டு வேகமாக தப்பி சென்றான்.
- போதைப் பொருட்களின் மதிப்பு ரூபாய் 10 லட்சம் இருக்கும்.
திருக்கோவிலூர்:
விழுப்புரம்-திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் கண்டாச்சிபுரம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்று இரவு குட்கா கடத்தலை தடுக்க சென்ற கண்டாச்சிபுரம் சப்-இன்ஸ்பெக்டரை கடத்தல்காரன் காரை மோதவிட்டு வேகமாக தப்பி சென்றான்.
கண்டாச்சிபுரம் தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக் டர்கள் சரவணன், கந்தன், உதவி ஆய்வாளர் காத்த முத்து மற்றும் போலீசார் கடத்தல்காரன் காரை இருசக்கர வாகனத்தில் சேசிங் செய்து கொண்டிருந்தனர்.
போலீசார் சுற்றிவளைப் பதை உணர்ந்த கடத்தல்காரன் கண்டாச்சிபுரம் அடுத்த அடுக்கம் வனப்பகு தியில் காரை விட்டு விட்டு அங்கிருந்து தப்பியோடி உள்ளான்.
கடத்தல் காரனை போலீசார் வலைவீசி தேடி வருகின்ற நிலையில் காரில் சுமார் 41 மூட்டைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா இருந்தது கண்டு பிடிக்கப் பட்டது.
காயமடைந்த போலீசார் முண்டியம் பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடத்தப்பட்ட போதைப் பொருட்களின் மதிப்பு ரூபாய் 10 லட்சம் இருக்கும் என தெரிகிறது.