உள்ளூர் செய்திகள்

ஏரியில் குளியல் போட்ட காட்டு யானைகள்.

ஏரியில் ஆனந்தமாக குளியல் போட்ட 5 காட்டு யானைகள்

Published On 2023-02-07 09:53 GMT   |   Update On 2023-02-07 09:53 GMT
  • நீரில் யானைகள் குளியல் போட்டு கும்மாளம் போடுவதை அந்த வழியாக சென்றவர்கள் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
  • வனத்துறையினர் பட்டாசு வெடித்தும், தாரதப்பட்டை அடித்தும் காட்டுக்குள் விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

பாலக்கோடு, 

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே மணியகாரன் கொட்டாய் கிராமத்தில் உள்ள ஜெர்த்தலாவ் பெரியஏரியில் தேன்கனிக்கோட்டை, சானமாவு உள்ளிட்ட பகுதியில் இருந்து உணவு தேடி வந்த 3 காட்டு யானைகள், 2 குட்டி யானையுடன் ஏரியில் தஞ்சம் அடைந்துள்ளது.

நேற்று பெரிய காட்டு யானைகளுடன், குட்டி யானைகள் ஏரியில் உள்ள நீரில் குளியல் போட்டு கும்மாளம் போடுவதை அந்த வழியாக சென்றவர்கள் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து பாலக்கோடு வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஏரியில் குளியல் போட்ட காட்டு யானைகளை வனத்துறையினர் பட்டாசு வெடித்தும், தாரதப்பட்டை அடித்தும் காட்டுக்குள் விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சமீப காலமாக பாலக்கோடு சுற்று வட்டார பகுதியில் உள்ள கிராமங்களுக்கு காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வருவதால் விவசாய நிலங்களில் உள்ள பயிர்கள் சேதமடைந்து வருவதுடன், கிராம மக்கள் அச்சத்துடனே வாழ்ந்து வருகின்றனர்.

ஈச்சம்பள்ளம் அருகே சுற்றி திரிந்த 20 வயது மக்னா யானையை பிடித்து ஆணைமலை முகாமிற்கு அனுப்பி வைத்த நிலையில் தற்போது மணியகாரன்கொட்டாய் கிராமத்தில் உள்ள ஜெர்த்தலாவ் பெரியஏரியில் குட்டி யானைகள் உட்பட 5 யானைகள் முகாமிட்டிருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த 5 யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டி விட வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News