உள்ளூர் செய்திகள்

தில்லைக்காளியம்மன் கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் காட்சி.

தில்லைக்காளியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.5.40 லட்சம் வசூல்

Published On 2023-01-12 08:28 GMT   |   Update On 2023-01-12 08:28 GMT
  • கோயில் வளாகத்தில் உள்ள 5 உண்டியல் திறந்து எண்ணப்பட்டது.
  • உண்டியலில் பக்தர்கள் செலுத்திய தங்கம் 19-கிராம், வெள்ளி 40 கிராம் கிடைத்துள்ளது.

கடலூர்:

பிரசித்தி பெற்ற சிதம்பரம் தி ல்லைக்காளியம்மன் கோவிலில் இந்து அறநிலை யத்துறை உதவி ஆணையர் சந்திரன், செயல் அலுவலர் சரண்யா, ஆய்வாளர் நரசிங்க பெருமாள் ஆகியோர் முன்னிலையில் கோயில் வளாகத்தில் உள்ள 5 உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. கோவில் அலுவலர்கள் ராமலிங்கம் மற்றும் வங்கி ஊழியர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். உண்டியல் திறந்து எண்ணப்பட்டதில் ரூ. 4 லட்சத்து 40 ஆயிரத்து 648 கிடைத்தது. மேலும் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய தங்கம் 19-கிராம், வெள்ளி 40 கிராம் கிடைத்துள்ளது. வெளிநாட்டு பணம் சிங்கப்பூர் டாலர் 107, மலேசியா ரிங்கட்-65, ஓமன் அரை ரியால், இலங்கை பணம் ரூ.1000 ஆகியவை இருந்தன.

Tags:    

Similar News