உள்ளூர் செய்திகள்

கோத்தகிரியில் நாவல் பழத்தை உண்ண மரத்தில் ஏறிய கரடி

Published On 2022-07-11 08:44 GMT   |   Update On 2022-07-11 08:44 GMT
  • கரடிகளின் நடமாட்டத்தை வனத் துறையினா் கண்காணித்து அதனை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • கடந்த ஒரு மாத காலமாக கரடிகள் நடமாட்டம் கணிசமாக அதிகரித்து காணப்படுகிறது.

அரவேணு:

கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக கரடிகள் நடமாட்டம் கணிசமாக அதிகரித்து காணப்படுகிறது.

நாவல் பழம் சீசன் என்பதால் பழங்களை உண்ண வரும் கரடிகள் சாலைகளில் நடமாடி வருவதுடன் அருகே உள்ள குடியிருப்புப் பகுதிகள் மற்றும் தேயிலைத் தோட்டப் பகுதிகளிலும் சுற்றி வருகிறது.இதனால் பொதுமக்கள் குடியிருப்புவாசிகள் தேயிலைத் தோட்ட தொழிலாளா்கள் அச்சமடைந்துள்ளனா்.

இந்நிலையில், கோத்தகிரி அரவேனு பகுதியில் வனத்தை விட்டு வெளியே வந்த கரடி ஒன்று வெகுநேரமாக தோட்டங்களிலேயே சுற்றி திரிந்தது. அப்போது அங்கு இருந்த நாவல் பழ மரத்தை பார்த்ததும் கரடி உற்சாகத்துடன் மரத்தின் மீது ஏறியது. பின்னர் அங்கிருந்த நாவல் பழத்தை பறித்து சாப்பிட்டது.

ஆட்கள் வரும் சத்தம் கேட்டதும், கரடி அங்கிருந்து தப்பித்து தேயிலை தோட்டம் வழியாக வனப்பகுதிக்கு ஒடியது. இப்பகுதியில் அடிக்கடி சுற்றித் திரியும் கரடிகளால் பொதுமக்களுக்கு ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் கரடிகளின் நடமாட்டத்தை வனத் துறையினா் கண்காணித்து அதனை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Tags:    

Similar News