சிறுவர்கள் ஓட்டி வந்த வாகனங்கள் பறிமுதல்- பெற்றோர் மீது வழக்கு பதிவு
- பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டு பெற்றோர்கள் உடனடியாக பத்திரகாளி அம்மன் கோவில் அருகே வந்தனர்.
- வாகனங்களுக்கு நீதிமன்ற உத்தரவின் படி பின்னர் அபராதம் விதிக்கப்படும் என பெற்றோர்களிடத்தில் தெரிவிக்கப்பட்டது.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பஸ் நிலையம் அருகே ரவுண்டானா பகுதியில் பவானி மோட்டார் வாகன ஆய்வாளர் குணசேகரன் தலைமையில் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது 18 வயதுக்கு கீழே உள்ள சிறுவர்கள் ஓட்டி வந்த இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து அவர்களது பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டு பெற்றோர்கள் உடனடியாக பத்திரகாளி அம்மன் கோவில் அருகே வந்தனர்.
அவர்களிடத்தில் 18 வயதுக்கு கீழே உள்ள குழந்தைகளிடத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்ட அனுமதிக்க கூடாது எனவும், அவ்வாறு கொடுப்பதால் விபத்துக்கள் அதிகளவில் ஏற்படுவதாகவும் கூறப்பட்டு அந்த வாகனங்களை பறிமுதல் செய்து 5 வாகனத்தின் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்து வாகனங்களை அந்தியூர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
மேலும் அந்த வாகனங்களுக்கு நீதிமன்ற உத்தரவின் படி பின்னர் அபராதம் விதிக்கப்படும் என பெற்றோர்களிடத்தில் தெரிவிக்கப்பட்டது. அப்போது அந்தியூர் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கஸ்தூரி, அந்தியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தனபால், மூர்த்தி உள்ளிட்ட போலீசாரும் உடன் இருந்தனர்.