உள்ளூர் செய்திகள்

கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் கூட்டம் நடைபெற்றபோது எடுத்த படம்.

வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்தம் தொடர்பாக தென்காசியில், அனைத்து கட்சி நிர்வாகிகளுடன் கருத்து கேட்பு கூட்டம்

Published On 2023-08-23 08:32 GMT   |   Update On 2023-08-23 08:32 GMT
  • கூட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
  • அதிகமான வாக்காளர்களை கொண்ட வாக்கு சாவடிகளை பிரிப்பது தொடர்பாக கூட்டத்தில் கருத்துக்கள் கேட்கப்பட்டது.

தென்காசி:

தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்தம் தொடர்பாக அனைத்து அங்கீகரி க்கப்பட்ட அரசியல் கட்சி யினருக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பாரதீய ஜனதா, ஆம்ஆத்மி, பகுஜன் சமாஜ், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் தே.மு.தி.க. கட்சிகளின் சார்பாக அதன் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி தற்போது ள்ள வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு இணங்க 1,500 வாக்காளர்களுக்கு அதிகமான வாக்காளர்களை கொண்ட வாக்கு சாவடி களை இரண்டாக பிரித்து வாக்குசாவடி மறுசீரமைப்பு செய்வது தொடர்பாக விளக்க மளிக்கப்பட்டு அரசியல் கட்சியை சேர்ந்த பிரதிநிதிகளிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டது.

இதில் தென்காசி மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொறுப்பு) முருகானந்தம், வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் டி.ஆர்ஓ., லா வண்யா, தேர்தல் தனி தாசில்தார் ஹென்றி பீட்டர் மற்றும் வருவாய் தாசில் தார்கள், தேர்தல் தனித் துணை தாசில்தார்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News