வேடசந்தூரில் பாட்டில் சேகரித்து விற்று பிழைப்பு நடத்தும் சினிமா நடிகர்
- நடிகர் ராமராஜன் நடித்த நம்ம ஊரு ராசா, சுப்பிரமணிய புரம், திண்டுக்கல் சாரதி, வியூகம், மோசடி உள்ளிட்ட பல படங்களில் சிறிய வேடங்களில் நடித்து ள்ளேன்.
- தற்போது வேலை இல்லாத காரணத்தால் பாட்டில் சேகரித்து அதனை விற்று பிழைப்பு நடத்தி வருகிறேன்.
வேடசந்தூர்:
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் உள்ள டாஸ்மாக் கடைகள் முன்பு பாட்டில் சேகரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருபவர் அந்தோணி (வயது 40). இவர் அதே பகுதியில் பல மாதங்களாக இதே பணியில் ஈடுபட்டு வரு கிறார். பாட்டில் கிடைக்காத சமயங்களில் திரைப்பட பாடல்களை பாடியபடியும், ரஜினி ஸ்டைலில் தீக்குச்சியை தன் உடலில் பற்ற வைத்தும் அப்பகுதி மக்களை மெய்சிலிர்க்க வைத்தார்.
இது குறித்து அவர் தெரிவிக்கையில், நடிகர் ராமராஜன் நடித்த நம்ம ஊரு ராசா, சுப்பிரமணிய புரம், திண்டுக்கல் சாரதி, வியூகம், மோசடி உள்ளிட்ட பல படங்களில் சிறிய வேடங்களில் நடித்து ள்ளேன்.
பட வாய்ப்பு இல்லாத சமயங்களில் எனது சொந்த ஊருக்கு வந்து விடுவேன். தற்போது வேலை இல்லாத காரணத்தால் பாட்டில் சேகரித்து அதனை விற்று வருகிறேன். நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் பலரை தனக்கு தெரியும் என்றும், தன்னால் மிமிக்கிரி உள்ளிட்ட பல திறமைகளை செய்து காட்ட முடியும் என கூறினார்.
குறிப்பாக ரஜினிகாந்த் படத்தில் வரும் பல்வேறு வசனங்களை பேசிய அந்தோணி அவரைப் போலவே தீக்குச்சியை தனது உடலில் பற்ற வைத்து எரிய வைத்தார். தனக்கு வருவாய் கிடைத்தால் அதில் பாதியை இல்லாதவர்களுக்கு உதவுவேன் என்று தெரிவித்தார்.
தற்போது கிடக்கும் வருவாய் போதுமானதாக இருந்தபோதிலும் சினிமாவில் நடித்து பெயர் ெபற வேண்டும் என்பதே தனது ஆசை என்றார்.