உள்ளூர் செய்திகள்

வலங்கைமானில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்

Published On 2023-01-17 09:08 GMT   |   Update On 2023-01-17 09:08 GMT
  • டாக்டர்கள் வழங்கும் சான்றின் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது.
  • மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெறாதவர்கள் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

நீடாமங்கலம்:

வலங்கைமான் வட்டார வளமைய மேற்பார்வை யாளர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திகு றிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் ஒன்றியத்தில் 1 முதல் 18 வயது வரையுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் வருகிற 20-ந் தேதி வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் நடைபெறுகிறது.

முகாமில் எலும்பு முறிவு, மனநலம், கண், காது, மூக்கு, தொண்டை, குழந்தைகள் நலம் ஆகிய பிரிவு டாக்டர்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்து சான்று வழங்க உள்ளனர்.

டாக்டர்கள் வழங்கும் சான்றின் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது.

முகாமில் கலந்து கொள்ளும் மாற்றுத்தி றனாளிகள் ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-5 மற்றும் இதற்கு முன் சிகிச்சை பெற்ற ஆவணங்களுடன் கலந்து கொள்ளலாம்.

வலங்கைமான் ஒன்றியத்தில் இதுநாள் வரை மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

மேலும், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெறாதவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, ஆதார் அட்டை நகல் மற்றும் புகைப்படம் -2 ஆகிய ஆவணங்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News