சூளகிரி அருகே விபத்தில் பலியானவர் உடலுடன் மறியல்: கிருஷ்ணகிரி-ஓசூர் சாலையில் பாலம் அமைக்க வலியுறுத்தல்
- பொதுமக்கள் இறந்தவர் உடலை சாலையில் வைத்து மறியல் செய்தனர்.
- இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே சாமல் பள்ளம் சாமல்பள்ளம் அருகே புளியரசியை சேர்ந்தவர் சத்தியராஜ் (வயது 26). இவரது மனைவி சக்தி(23). திருணமாகி 7 மாதம் ஆகிறது. ஒடையனுர் எனுமிடத்தில் அண்ணனுடன் தாபா ஓட்டல் நடத்தி வருகின்றனர்.
தனது தாய் காசியம்மா வுடன் சத்தியராஜ் இரு சக்கர வாகனத்தில் தனது வீட்டிற்கு செல்ல கிருஷ்ணகிரி- ஓசூர் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது கிருஷ்ணகிரியில் இருந்து ஓசூருக்கு வந்த லாரி இவர்கள் மீது மோதியதில் தாய் உயிர் தப்பினார்.
சத்தியராஜ் தலை நசுங்கி பலியானார். இதை அறிந்த ஊர் பொதுமக்கள் இறந்தவர் உடலை சாலையில் வைத்து மறியல் செய்தனர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.
இதை அறிந்த எஸ்.பி. சரோஜ்குமார் தாகூர்,மற்றும் போலீசார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி இறந்தவர் உடலை ஒசூர் அரசு மருத்துமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த பகுதியின் அருகே அரசு மேல்நிலை பள்ளி உள்ளது. மாணவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். இப்பகுதியில் மேம்பாலம் அமைக்க பல ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதிகாரிகள் இப்பகுதியில் உடனே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.