உள்ளூர் செய்திகள்

பிளஸ்-2 பொதுத் தேர்வில் கிருஷ்ணகிரி பாரத் மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவிகள் சாதனை

Published On 2023-05-10 09:17 GMT   |   Update On 2023-05-10 09:17 GMT
  • பள்ளியில் படித்த மாணவி சைலஜா 600-க்கு 591 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளார்.
  • பள்ளியில் சிறப்பிடம் பெற்று பெருமை சேர்த்த மாணவி, மாணவிகளுக்கு பள்ளியின் நிறுவனர் மணி பரிசு வழங்கி பாராட்டி பேசினார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி பாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் நடந்து முடிந்த பிளஸ்-2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

இந்த பள்ளியில் படித்த மாணவி சைலஜா 600-க்கு 591 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளார்.

நிரஞ்ஜனா மற்றும் நவீன் ஆகியோர் 590 மதிப்பெண்கள் பெற்று 2-ம் இடம் பிடித்துள்ளனர். 500 மதிப்பெண்களுக்கு மேல் 23 மாணவர்களும், 450 மதிப்பெண்களுக்கு மேல் 62 மாணவர்களும் பெற்றுள்ளனர்.

வேதியலில் 7 பேரும், கணினி பயன்பாட்டியலில் 2 பேரும், கணினி அறிவியலில் ஒருவரும், பொருளியலில் ஒருவரும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். மேலும் தமிழில் 27 பேரும், ஆங்கிலத்தில் 15 பேரும், இயற்பியலில் 16 பேரும், வேதியியலில் 30 பேரும், உயிரியலில் 19 பேரும், கணித பாடத்தில் 10 பேரும், கணினி அறிவியலில் 10 பேரும், கணக்கு பதிவியலில் 7 பேரும் 100-க்கு 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்.

பள்ளியில் சிறப்பிடம் பெற்று பெருமை சேர்த்த மாணவி, மாணவிகளுக்கு பள்ளியின் நிறுவனர் மணி பரிசு வழங்கி பாராட்டி பேசினார்.

மேலும் மாணவர்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர் மற்றும் ஆசிரியைகளை பள்ளியின் தாளாளர் கிருஷ்ணவேணி மணி, செயலர் டாக்டர் சந்தோஷ், பள்ளியின் முதல்வர் விஜயகுமார், துணை முதல்வர் நசீர்பாஷா ஆகியோர் பாராட்டினார்கள்.

Tags:    

Similar News