உள்ளூர் செய்திகள்
ஆதனூர் வீமநாயகி அம்மன் கோயில் தேரோட்டம்
- பக்தர்கள் பால் குடம், காவடி எடுத்து வந்து நேர்த்தி கடனை செலுத்தினர்.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்,
பேராவூரணி:
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே ஆதனூர் கிராமத்தில் அருள் பாலித்து வரும் வீமநாயகி அம்மன் கோயிலில் திருவிழா நடை பெற்றது.
விழாவில் 9 ம் நாள் காலை முதல் பக்தர்கள் பால் குடம், காவடி எடுத்து வந்து நேர்த்தி கடனை செலுத்தினர்.
மாலை 5.00 மணியளவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரோட்டத்தில் ஆதனூர், கூப்புளிக்காடு, பாங்கிரான்கொல்லை, கழனிவாசல், பேராவூரணி, பொன்காடு, சித்தாதிக்காடு மற்றும் சுற்று வட்டார பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தேரோட்டத்திற்கு முதல் நாள் மாலை பேராவூரணி நீலகண்டபுரத்திலிருந்து குதிரை எடுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது நேர்த்திகடனை செலுத்தினர்.