உள்ளூர் செய்திகள்

முன்னாள் அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன்.

திறமையாக பேசி மக்களை ஏமாற்றி வருவதுதான் திராவிட மாடல்- முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் பேச்சு

Published On 2023-10-03 07:50 GMT   |   Update On 2023-10-03 07:50 GMT
  • கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. ஆத்தூர் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது.
  • கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் கலந்து கொண்டு பேசினார்.

ஆத்தூர்:

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. ஆத்தூர் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய வாக்கு ச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் கலந்து கொண்டு பேசியதாவது:-

தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 உரிமைத் தொகை தருவதாக உறுதியளித்து விட்டு தற்போது தகுதியுள்ள பெண்களுக்கு மட்டும் வழங்கப்படும் என கூறி ஏமாற்றி வருகின்றனர்.

அ.தி.மு.க. ஆட்சியில் ஒரு குடும்பத்துக்கு ரூ.7000 இருந்தால் மாத செலவை சமாளித்து விடலாம். ஆனால் தற்போது ரூ.1000 இருந்தாலும் பற்றாக்குறை யாக உள்ளது. 99 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியு ள்ளளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுவது மோசடியான ஏமாற்று வேலை. சொத்து வரி, வீட்டு வரி, மின் கட்டணம் உள்ளிட்ட கட்டண ங்களை பல மடங்கு உயர்த்தியுள்ளனர். இனால் தொழில் துறையினர் கடுமை யாக பாதிக்கப்பட்டு ள்ளனர். தாலிக்கு தங்கம், லேப்டாப் உள்ளிட்ட அ.தி.மு.க.வின் பல நல்ல திட்டங்களை தி.மு.க.வினர் நிறுத்தி விட்டனர்.

மக்களை திறமையாக ஏமாற்றி மோசடி செய்வதுதான் திராவிட மாடல் ஆட்சி என்று நடத்தி வருகின்றனர். இது போன்ற அதிருப்தியை வாக்குகளாக சேகரிக்க அ.தி.மு.க. தொண்டர்கள் அனைவரும் கவனமுடன் பணியாற்ற வேண்டும்.

போலீஸ் அதிகாரியாக இருந்து அரசியலுக்கு வந்த ஒரு கட்சித் தலைவர் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து கொண்டே அண்ணாவை கொச்சைப்படுத்தி பேசும் அளவுக்கு ஆணவத்துடன் நடந்து வருகிறார். நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் போன்ற சிலர் மீடியா வெளிச்சத்தில் அரசியல் நடத்துகின்றனர்.

கூட்டணி என்ற பெயரில் நம் தோளில் அமர்ந்து காதை கடிக்கின்ற வேலையை செய்தனர். தற்போது அவர்களை நாம் தூக்கி எறிந்து விட்டோம். இனி அ.தி.மு.க.வின் வெற்றிக்கு எந்த தடையும் இல்லை. அனைத்து மதங்களையும் அரவணை க்கும் இயக்கமாக அ.தி.மு.க. செயல்படும். சனாதனம் என்ற போர்வையில் இந்து மதத்தை தி.மு.க.வினர் எதிர்க்கின்றனர். தமிழ்நாடு இது வரை கண்டிராத மோசமான நிர்வாகத்தை நடத்தி வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News