உள்ளூர் செய்திகள்

மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற காட்சி.

ராதாபுரம் யூனியனுக்குட்பட்ட கிராமங்களின் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆலோசனை

Published On 2022-09-30 09:32 GMT   |   Update On 2022-09-30 09:32 GMT
  • ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ராதாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களின் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
  • ஊராட்சி ஒன்றியத்தை சார்ந்த மாவட்ட கவுன்சிலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர் .

திசையன்விளை:

ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ராதாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களின் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ் தலைமையில் நடைபெற்றது.

இதில் ஊராட்சி ஒன்றியத்தை சார்ந்த மாவட்ட கவுன்சிலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர் .

இந்த கூட்டத்தில் கிராம பகுதிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும் பல்வேறு திட்டங்களின் கீழ் அடிக்கல் நாட்டப்பட்டு நடைபெற்று வரும் பணிகள் குறித்து மற்றும் அவற்றின் நிலை குறித்தும் ஆலோசிக்கபட்டது. மேலும் ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்கு உட்பட்ட கிராமங்களின் குடிநீர் தேவைகள் மற்றும் குடிநீர் தட்டுப்பாடு குறித்து விவாதிக்கப்பட்டது.

குடிநீர் தட்டுப்பாடு குறித்து அதிகாரிகளுடன் விரைவில் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும் என கூறப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட கவுன்சிலர் ஜான்ஸ் ரூபா, ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி, ராதாபுரம் ஊராட்சி மன்ற கூட்டமைப்பு தலைவர் அனிதா பிரின்ஸ், ஒன்றிய கவுன்சிலர்கள் நடராஜன், ராஜா,ஞான சர்மிளா கெனிஸ்டன்,படையப்பா முருகன், இசக்கி பாபு, ஆவுடைபாலன், அரிமுத்தரசு,காந்திமதி, ஊராட்சி மன்ற தலைவர்கள் சற்குணராஜ்,சேகர்,பைக் முருகன்,பொன் மீனாட்சி அரவிந்தன்,வைகுண்டம் பொன் இசக்கி,அருள்,பேபி முருகன், முருகேசன், முருகன், ராதிகா சரவண குமார்,வாழ வந்த கணபதி பாலசுப்ரமணியம், சூசை ரத்தினம்,மணிகண்டன், ஆனந்த்,சாந்தா மகேஷ்வரன்,வின்சி மணியரசு, வளர்மதி, சந்தனமாரி, சகாயராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.மேலும் தங்கள் கிராம பஞ்சாயத்துகளில் மேற்கொள்ள வேண்டிய நலத்திட்டங்கள் குறித்தும் கலந்து ஆலோசனை நடத்தபட்டது.

Tags:    

Similar News