உள்ளூர் செய்திகள்

விவசாய கண்காட்சியில் வைக்கப்பட்டு இருந்த பழங்கள், காய்கறிகள்.

பெரியகுளம் அருகே வேளாண் விவசாய கண்காட்சி

Published On 2022-07-09 05:36 GMT   |   Update On 2022-07-09 05:36 GMT
  • மதுராபுரியில் பச்சை பூமி சார்பில் வேளாண்மை விவசாய கண்காட்சி நடை பெற்றது.
  • இதனை விவசாயிகள் நேரில் பார்வையிட்டு தங்களுக்கு தேவையான பொருட்களை தேர்வு செய்து பயன் பெற்றனர்.

பெரியகுளம்:

தேனிமாவட்டம் பெரிய குளம் அருகே வடபுதுப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட மதுராபுரியில் பச்சை பூமி சார்பில் வேளாண்மை விவசாய கண்காட்சி நடை பெற்றது.

இக்கண்காட்சியில் பெரியகுளம் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் வீரிய ஒட்டு காய்கறிகள், நாற்றுகள், மா, முருங்கை ஒட்டு செடிகள், திசு வாழைக் கன்றுகள் போன்றவைகளை தோட்ட க்கலை உதவி இயக்குனர் ஜாஸ்மின் வழிகாட்டுதலின் கீழ் தோட்டக்கலை அலுவ லர் சரவணன் இலவசமாக வழங்கி அரசின் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விரிவாக எடுத்துரைத்தார்.

மேலும் பட்டு வளர்ச்சி த்துறை சார்பில் பட்டுப்புழு வளர்ப்பு 5 பருவங்கள் முடிவுற்று பட்டுப்புழு கூடு கட்டி நூல் வெளியேறும் பருவம் வரை விவசாயிகள் பார்வைக்கு கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்து. விவசாயிகளிடையே பட்டு வளர்ப்பு குறித்து உதவி இயக்குனர் கணபதி வழிகாட்டுதலின் கீழ் பட்டு ஆய்வாளர் ஆறுமுகம் எடுத்துரைத்து தமிழக அரசின் கீழ் தயாரிக்கப்ப ட்டுள்ள பட்டு வளர்ப்பு கையேடு வழங்கினார்.

இக்கண்காட்சியில் வேளாண் விளை பொரு ள்கள், வேளாண்மை சார்ந்த கருவிகள், இயற்கை உர ங்கள், கால்நடை தீவனங்கள் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பில் காட்சி பொருளாக வைத்தி ருந்தனர். இதனை விவசாயி கள் நேரில் பார்வையிட்டு தங்களுக்கு தேவையான பொருட்களை தேர்வு செய்து பயன் பெற்றனர்.

இதில் தேனி தோட்ட க்கலை அலுவலர் பாண்டி யன், உதவி அலுவலர் ரெங்கராஜ், தேனி பட்டு ஆய்வாளர் கோவிந்தராஜ், இளநிலை ஆய்வாளர்கள் அழகேசன் ராஜேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News