உள்ளூர் செய்திகள்

உணவகத்தில் போலீசார் விசாரணை நடத்தியபோது எடுத்த படம்.

உணவகத்தில் மது அருந்த அனுமதித்ததாக உரிமையாளர்கள் 2 பேர் மீது வழக்கு

Published On 2023-01-17 09:03 GMT   |   Update On 2023-01-17 09:03 GMT
  • பரமத்தி வேலூர் பழைய தேசிய நெடுஞ்சாலையில் ஒரு உணவகம் இயங்கி வருகிறது.
  • உணவகத்தில் இருந்த அனைத்து குடில்களிலும் பலர் மது அருந்திக் கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பழைய தேசிய நெடுஞ்சாலையில் ஒரு உணவகம் இயங்கி வருகிறது. இங்கு இளைஞர்கள் மற்றும் அப்பகுதி ஆண்களுக்கு தினமும் மது அருந்த அனுமதி அளிப்பதாகவும், முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, பிறந்தநாள், பல்வேறு விழாக்களுக்கு பார்ட்டி வைத்து கொண்டாடுவதற்கும், கும்பலாக மது அருந்துவதற்கும் அனுமதி அளிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த பரமத்திவேலூர் போலீசார், உணவகத்தில் திடீர் சோதனை நடத்தினர். இதில் உணவகத்தில் இருந்த அனைத்து குடில்களிலும் பலர் மது அருந்திக் கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து அந்த உணவகத்தின் உரிமையா–ளர்களான சகோதரர்கள் செந்தில், சிவா ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் உரிய அனுமதி பெறாமல் உணவ–கத்தில் மது அருந்த அனுமதித்தது தெரியவந்தது. இதையடுத்து செந்தில், சிவா ஆகிய இருவர் மீதும் பரமத்திவேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

மேலும் இது போன்று சட்ட விரோதமாக உணவ–கங்கள், தாபாக்கள், ரெஸ்டா–ரண்டில் அனுமதி இன்றி மது விற்பது, மது அருந்த அனுமதி அளிப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டால், குற்றவியல் வழக்கு தொடரப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். 

Tags:    

Similar News