உள்ளூர் செய்திகள் (District)

கோப்பு படம்.

கம்பம் அருகே உடலில் காயங்களுடன் மர்மமாக இறந்து கிடந்த யானை

Published On 2023-11-06 07:42 GMT   |   Update On 2023-11-06 07:42 GMT
  • அந்த யானைக்குட்டி ஆண் என்பதால் தந்தத்துடன் காணப்பட்டது.
  • தந்தம் உள்ள பகுதியிலும் காய ங்கள் இருந்ததால் தந்தத்திற்காக கொலை செய்யப்ப ட்டதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

கம்பம்:

தேனி மாவட்டம் கம்பம் அருகே ஆண் யானை குட்டி மர்மமாக இறந்து கிடந்ததால் உரிய விசாரணை நடத்த வேண்டும் என வன ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தேனி மாவட்டம் சுருளி அருவி, மணலாறு, இரவங்க லாறு, வெண்ணியாறு பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. தேக்கடி வனப்பகுதியில் இருந்து மேகமலை வனப்பகுதிக்கு யானைகள் வந்துபோவது அடிக்கடி நடந்து வருகிறது. குறிப்பாக கம்பத்திற்கு அரிசி கொம்பன் யானை வந்து சென்றபிறகு இதுபோன்ற யானைகள் நடமாட்டம் அதிகரித்து ள்ளது.

இந்நிலையில் இரவங்க லாறு அணையின் கரையை யொட்டி ஆண் யானை க்குட்டி ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இது குறித்து வனத்துறை யினருக்கு தோட்ட தொழி லாளர்கள் தகவல் அளித்தனர்.

அந்த யானைக்குட்டி ஆண் என்பதால் தந்தத்துடன் காணப்பட்டது. இதனை யடுத்து கால்நடை பரா மரிப்புத்துறை டாக்டர் தலைமையில் அங்கு வந்த குழுவினர் யானை குட்டியி ன் உடலை பிரேத பரிசோ தனை செய்து அதனை வனப்பகுதியிலேயே புதைத்தனர்.

யானை குட்டி இறப்பிற்கான தகவல்கள் மாறுபட்ட முறையில் வெளியாகி உள்ளது. வயிற்று வலியால் யானை இறந்திருக்கலாம் என டாக்டர்கள் தெரிவித்தனர். ஆனால் யானையின் கழுத்து, தலை உள்ளிட்ட பகுதிகளில் காயங்கள் காணப்பட்டன. தந்தம் உள்ள பகுதியிலும் காய ங்கள் இருந்ததால் தந்தத்தி ற்காக கொலை செய்யப்ப ட்டதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே யானையின் இறப்பு குறித்து துணை இயக்குனர் ஆனந்த் சிறப்பு விசாரணை நடத்த வேண்டும் என வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News